ஐஎஸ் அமைப்பால் அமெரிக்காவின் கதிர்வீச்சுப் பொருட்கள் திருட்டு!

ஈராக்கில் பஸ்ரா என்ற நகரத்தில் அமெரிக்காவுக்குச் new-Gif1சொந்தமான எண்ணெய் வயலொன்று காணப்படுகின்றது. இதில் எண்ணெய் மற்றும் எரிவாயு பரிசோதனைக்காக கதிர்வீச்சுப் பொருட்கள் சிலவற்றை அமெரிக்கா வைத்துள்ளது. இந்நிலையில் மடிக்கணினி அளவுள்ளதும் அதே வடிவிலுள்ளதுமான கதிர்வீச்சுப்பொருள் கடந்த நவம்பர் மாதத்தில் திருட்டுப் போயுள்ளது. இது தொடர்பாக ஈராக் அரசாங்கம் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது.

மேலும், அந்தக் கதிர்வீச்சுப் பொருட்களை ஐஎஸ் தீவிரவாதிகள் களவாடியிருக்கக்கூடுமென ஈராக் அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் இந்தப் பொருட்கள் அவர்களின் கையில் கிடைத்தால் மோசமான அணு ஆயுத உற்பத்திக்கு அது வழிவகுக்குமெனவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், அண்மைய காலங்களில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதலுக்காக இரசாயனங்கள் பயன்படுத்தியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.Gif-yarlfm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*