திரு.பரமலிங்கம் அவர்கள் மீதான படுகொலை முயற்சிக்குப் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பட்டார் சிவந்தன் கோபி கண்டனம்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரெஞ்சுக் கிளைப் பொறுப்பாளர் திரு.பரமலிங்கம் அவர்கள் மீதான படுகொலை முயற்சிக்குப் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர்களில் ஒருவரும், அறப்போர் செயற்பாட்டாளருமான கோபி சிவந்தன் அவர்கள் கருத்துரைக்கையில்:

பரமலிங்கம் அவர்கள் மீது சிங்களக் கைக்கூலிகள் மேற்கொண்ட படுகொலை முயற்சியை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.

புலம்பெயர் தேசங்களில் மீண்டும் ஏற்பட்டுள்ள தமிழர்களின் எழுச்சியை முடக்கும் நோக்கத்துடனேயே பரமலிங்கம் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு அவரைப் படுகொலை செய்வதற்கான முயற்சியை சிங்களம் மேற்கொண்டிருக்கின்றது.

தமிழீழ தாயகத்தில் சத்தம் சந்தடியற்ற முறையில் தமிழின அழிப்பை அரங்கேற்றி வரும் சிங்களம், புலம்பெயர் தேசங்களில் தனது கொலைக் கரங்களை மீண்டும் நீட்டியிருப்பதன் மூலம் மீண்டும் தனது இனவழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தைப் பட்டவர்த்தனமாக்கியுள்ளது.
சிங்களத்தின் இவ்வாறான கோழைத்தனமான படுகொலை முயற்சிகள் எமது அரசியல் வேணவாவை ஒருபொழுதும் நசுக்கி விடாது.’ என்றார் கோபி சிவந்தன்.Gif-yarlfm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*