திரு.பரமலிங்கம் அவர்கள் மீதான தாக்குதல் கோழைத்தனமான செயல் அறப்போர் செயற்பாட்டாளர் சுப்ரமணியம் பரமேஸ்வரன் கடும் கண்டனம்.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரமலிங்கம் அவர்கள் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட படுகொலை முயற்சிக்கு அறப்போர் செயற்பாட்டாளர் சுப்ரமணியம் பரமேஸ்வரன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து கருத்துரைத்த பரமேஸ்வரன், புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களின் வீச்சை எதிர்கொள்ள முடியாத நிலையிலேயே இவ்வாறான கோழைத்தனமான செயல்களில் சிங்களம் இறங்கியிருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார்.

எனினும் இவ்வாறான படுகொலை முயற்சிகளால் புலம்பெயர் தமிழர்களின் எழுச்சியை ஒரு பொழுதும் மழுங்கடிக்க முடியாது என்றும் பரமேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.imageGif-yarlfm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*