நாம் தமிழர் கட்சி – பொறுப்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு விடுக்கும் அறிவித்தல்…

இணையதளச் சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்கும் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் பொதுவெளியில் தேவையில்லாத விவாதங்களில் கண்டிப்பாகப் பங்கேற்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தேர்தல் நேரத்தில் நமது நேரத்தை விரையம் செய்யும் விதமாகவும், விதண்டாவாதமாகப் பேசி நம்மைத் திசை திருப்பவும் இந்தத் தேவையற்ற விவாதங்கள் வழிவகுக்கும். ஊடகங்கள் நம்மை ஆதரிக்காத இந்த நேரத்தில் சமூக ஊடகங்கள் தான் நமக்குக் கிடைத்த ஆயுதம் அதை நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளைப் பரப்பவும், சீமான் அண்ணன் பேச்சு காணொளிகளைப் பரப்பவும், தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளவும் மட்டும் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

— மணிசெந்தில்/ பாக்கியராசன் சே,
இணையதளப் பாசறை,
நாம் தமிழர் கட்சி.Gif-yarlfm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*