ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் சாலை விபத்தில் சிக்கி காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளார்.

சாலை விபத்தில் சிக்கி காயமடைந்தவரை ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளார்.new-Gif1

ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் நேற்று தனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனைக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்று விட்டு சென்னைக்கு திரும்பியுள்ளார்.

அவரது கார் திருச்சியை தாண்டி காவேரி கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் ஒருவர் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்துள்ளார்.

விபத்தில் சிக்கிய அந்த நபரை யாரும் கண்டு கொள்ளாத நிலையில், இந்த சம்பவத்தை பார்த்த சகாயம் உடனே வண்டியை நிறுத்தி இறங்கியுள்ளார். அடிபட்டவருக்கு குடிநீர் கொடுத்து பின் உடனடியாக 108 அவசர ஊர்திக்கு தகவல் அளித்துள்ளார்.

அவசர ஊர்தி வந்தவுடன் அந்த நபரை ஏற்றிவிட்டபிறகே அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர் காவல்துறை விசாரணையில் விபத்தில் சிக்கிய நபர் கோயம்புத்துரை சேர்ந்த சாமுவேல் எனத் தெரியவந்துள்ளது.

கொள்ளிடத்தில் உள்ள தனது நண்பர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தபோது அவர் விபத்தில் சிக்கியதாக தெரியவந்துள்ளது. படுகாயமடைந்த அவருக்கு உடனடியாக சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்ததால் தற்போது அவர் உயிருக்கு ஆபத்தின்றி சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், இந்த விபத்துக்கு காரணமான லொறியை பொலிசார் தேடிவருகின்றனர்.Gif-yarlfm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*