“திலீபனை அடித்து துவைத்து “உடைக்கப்பட்டது கை மட்டும் அல்ல விரல்களும் தான்” -Prabhakaran PK

“திலீபனை அடித்து துவைத்து,கையை மற்றும் மூன்று விரல்களை உடைத்து,ஸ்டான்லி மருத்துவ மனையில் வைத்து காவிகளை அழைத்து புகைப்படம் எடுக்க new-Gif1அனுமதித்த ஏவல் துறை”

திலீபன் மகேந்திரனை ராயப்பேட்டையில் வைத்து கைது செய்து கண்ணை கட்டி அழைத்து சென்ற புளியந்தோப்பு காவல்த்துறை,கோணிப் பையால் கையை சுற்றி,இரும்பு ராடை வைத்து,கையை உடைத்த செய்தியை தோழர்கள் முலம் நேற்று அறிந்தோம்.

ஆனால் இன்று அறியப்பட்ட செய்தி மேலும் அதிர்ச்சியை அளிக்கிறது.திலீபன் மகேந்திரனை 11 மணிக்கு அழைத்து சென்ற காவல்துறை,இரவு 6 மணிவரை குருதிப் புனல் இறுதிக்காட்சியில் வருவது போல அடித்து துவைத்துள்ளது.

பிறகு வந்து,” உன்னோட கையேடு சேர்த்து இன்னொரு எலும்பையும் ஓடைக்கப்போறோம்.என்ன எலும்ப ஓடைக்கரதுனு நீயே சொல்லு.உனக்கு 5 நிமிஷம் டைம்” எனக்கூறிவிட்டு சென்றுள்ளது.5 நிமிடம் கழித்து வந்த பின்னர் திலீபன் மகேந்திரன் பயத்தை எதுவும் பேசாமல் இருக்க,, மகேந்திரனின் மூன்று விரல்களை அடித்து உடைத்துள்ளது.

பிறகு உடைந்த கைக்கு சிகிச்சை அளிக்காமல் அவனை வழியில் துடிக்க வைத்து,,
அவன் கண்ணைக்கட்டி,புளியந்தோப்பு காவல் நிலையத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.அங்கும் மகேந்திரனை சரமாரியாக தாக்கிய பின்னர், “உனது கையை உடைக்கபோகிறோம்.ஓடினாலோ அல்லது தடித்தாலோ வேற ஏதாவது இடத்தில் பட்டு உயிரே போயிரும்.கையை நீட்டு” எனக் கூறி கையை கோணிப்பையால் சுற்றி இரும்பு ராடல் கையை உடைத்துள்ளனர்.

கை உடைக்க அழைத்து சென்ற இடத்தில் சிலர் ஹிந்தி பேசியதாக மகேந்திரன் கூறியுள்ளார்.ஆக அது மதிய அரசு படையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பிறகு மகேந்திரனை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்று, ” இவன் தான் நம் தேசியக் கோடியை எரித்தவன்.இவனுக்கு எவ்வளவு தரம் குறைந்த சிகிச்சை அளிக்க முடியுமோ அதை கொடுங்க” என மருத்துவரிடம் கூறியுள்ளது ஏவலத் துறை.

உடைந்த எலும்புகளுக்கு தரமான சிகிச்சை அளிக்காமல்,பெயருக்கு,மகேந்திரனுக்கு வலிக்கும்படி கட்டை போட்டுள்ளார் மருத்துவர்.கட்டு போடும் போதுவலிக்கிறது என மகேந்திரன் அலாரியபோது, ” எங்க கோடியை எரிக்கும் போது இந்த அறிவு இருந்திருக்கணும் டா” என அதட்டியுள்ளார் மனிதநேயத்தின் மொத்த வடிவான டாக்டர்.
முறையான சிகிச்சை அளிக்காமல் பெயருக்கு ஒரு கட்டை போட்டு,துரத்தி உள்ளார்கள் மருத்துவர்கள்.
அதன் பிறகு தான் நமக்கு பேரதிர்ச்சி அளிக்கும் சம்பவம் நடந்துள்ளது.

ஆர்எஸ்எஸ் காவி கும்பலுக்கு போன் செய்து அவர்களை வரவழைத்துள்ளது காவல்த்துறை. அதையடுத்து அங்கே வந்த 20, 30 திற்கு மேற்ப்பட்ட காவி கும்பல், மகேந்திரன் சித்தரவதை செய்யப்பட்ட உடலுடன், உடைந்தத கையுடன் நிற்க வைத்து,,அவனை பல கோணங்களில் படம் எடுத்துள்ளது.இவை அனைத்து காவல்த்துறையினர் கைமுன்னே,பூரண ஆசியுடன் நடந்தது தான் பேரதிர்ச்சி தரும் கொடூரம்.
சட்டத்தை மதித்து நடக்க வேண்டிய காவல்துறை,இப்படி கெடுகெட்ட ஏவல்துறையாகவும்,ஒரு கூலிப்படையாகவும் நடந்துள்ளது.இது ஒன்று முதல் நிகழ்ச்சி அல்ல.
ஒரு சாமானியனுக்கும்,இந்த நாட்டில் சிறுபான்மையாகவும்,இந்த நாடு ஜன நாயக நாடு என நம்பிவாழும் ஏமாளிகளுக்கும் இது தான் நிலைமை.
இதை நாம் கடந்து செல்வோமானால்,இந்தியத்தை எதிர்த்து ஜனநாயக ரீதியில் போராடும் நம் அனைவருக்கும் நேரும்.
ஆக இந்த செய்தியை முகநூல் மூலமும் வாட்ஸ்அப் மூலமும் பரப்பவும்.
——————————————————————————————————–
இந்த தகவல் நேற்று முன்தினம், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர்.மூத்த வழக்கறிஞர் அய்யா சை.துரைசாமி அவர்களின் கீழ் வழக்கறிஞராக பணிபுரியும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் வை.இளங்கோவன் அவர்கள் மகேந்திரனை சந்தித்து பெற்ற தகவல். 100 சதவீத உறுதியான தகவல்…7_n theepan0_n thi 5_nGif-yarlfm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*