பிரபாகரனை கடைசியாக சந்தித்த சீமானால் இவ்வளவு பெரிய மாற்றத்தை, எழுச்சியை தமிழர்களிடேயே ஏற்படுத்த முடியும் என்றால்??? (தமிழ்மாறன்)

பிரபாகரனை கடைசியாக சந்தித்த சீமானால் இவ்வளவு பெரிய மாற்றத்தை, எழுச்சியைnew-Gif1 தமிழர்களிடேயே ஏற்படுத்த முடிகின்றதால்,

இயக்கம் ஆரம்பித்த முதல் முள்ளிவாய்க்கால் முடிவுவரை தொடர்பில் இருந்த வைகோ, கொளத்தூர் மணி, வீரமணி போன்றோரின் தமிழர் வேடம் இன்று களைந்து விட்டது ஒரு புறம் இருந்தாலும்,

பழ.நெடுமாறன், ஜெகத் காஸ்பர் போன்றோர்களால் எந்த வித சலனமும் இல்லாமல் எப்படி போலியான காட்சி அரசியல் செய்ய முடிகின்றது…? இவரிகளின் நோக்கம் தான் என்ன??

இது வரை இயக்கம் வைத்து செயல்பட்ட நெடுமாறன், மணியரசன் போன்றோர்கள் தமிழ் தேசிய உணர்வு கொண்ட இளைஞர்களை அரசியலுக்கு போக விடாமல் தன் பக்கம் ஈர்த்து திராவிட இயக்கம் பாணியில் உணர்வாளர்களை காயடிப்பது ஏன்…?

ஒருவேளை அரசியலில் நம்பிக்கை இல்லை எனில், புலிகள் பலமாக இருந்த போதே, இங்கும் இவர்கள் ஆயுத போராட்டத்தை முன்னெடுத்து இருக்கலாமே…..!!

சீமான் கட்சி ஆரம்பித்த பின்னர், ஐந்தாண்டுகள் முழுமையாக மக்களிடம் கட்சியை தன் பேச்சால் கொண்டு சேர்த்து இப்போது தனித்து களம் காணும் போது, திடீரேனே இப்போது அரசியல் கட்சியாக மாறி தேர்தல் பாதைக்கு வருவது எதற்கு??
இவர்கள் தமிழ் தேசிய அரசியலை குழப்பநிலைலையே வைத்திருக்க நினைகிறார்களா…?

வீரப்பன் கொல்லோச்சிய போதும், இவர்கள் செயல்பாடு வெறும் காட்சி அரசியல் தான், பேட்டி எடுத்து வியாபாரம் செய்ததை தவிர வேறு என்ன உருப்படியாக செய்தார்கள்? வீரப்பன் தமிழ் தேசிய அரசியலை பேச ஆரம்பித்த போது, உடனே அவர் கொல்லப்பட்ட போதும், இவர்கள் கள்ள மவுனம் தானே காத்தார்கள்….!

முள்ளிவாய்கால் முடிவில் விடுதலைபுலிகள் முழுவதும் அழிந்த பிறகும், பிரபாகரன் இறக்கவில்லை என்று திரும்ப திரும்ப நெடுமாறன், வைகோ போன்றோர்கள் ஏன் கூற வேண்டும்……..??
அப்படி கூறி இயல்பபாக எழும் மக்களின் தன் எழுச்சியை எதற்காக, யாருக்காக மட்டுபடுத்த வேண்டும்……..??

ஒரு வேலை பிரபாகரன் மீண்டும் வந்தால் எதிரியை விட துரோகிகளையே முதலில் வீழ்த்துவார் என்பது கூடவா இவர்கள் அறியாமல், மீண்டும் பிரபாகரன் வருவார் என்று எப்படி சொல்கிறார்கள்?? போரின் போது கடைசி வரையில் தொடர்பில், ஆலோசனையில் இருந்தவர்களே இவர்கள் தானே…??

பிரபாகரன் இருந்தால் எம் தலைவன்,
இறந்தால் எம் இறைவன் என்று,
ஆயுதம் மிச்சம் வைத்ததை அரசியலில் வென்று எடுக்க தலைவர் கட்டளையை செயல்படுத்தும் சீமான் எங்கே??

தமிழ் தேசிய அரசியலை ஓர்மை படுத்தாமல், தனித்து செயல்பட்டு தமிழர் ஓட்டுக்களை சிதறடிக்கும் இவர்கள் எங்கே??

ஒரு 5000 பேரை கூடவா உன்னால் திரட்டி போராட முடியாது?
அத்தனை பேருக்குமா சிறைச்சாலை உள்ளது என்று ஆதங்கமாக தலைவர் சீமானிடம் கேட்டதை, இன்று லட்சக்கணக்கான மக்களை திரட்டும் வலிமையை பெற்று களமாடும் அண்ணன் சீமான் எங்கே?

அன்றே பல லட்சம் தொண்டர்களை வைத்திருந்த திருமா,ராமதாஸ் போன்றோர்கள் தங்கள் சாதிக்காக கூடிய கூட்டத்தில் 1000 இல் ஒரு பங்கு கூட திரட்டி போராடாமல் கடைசி வரை தமிழ் இன துரோகியுடன் பதவி சுகம் அனுபவித்த இவர்கள் மட்டும் யார்??

ஒன்று மட்டும் நிச்சியம், இனி தனி மனித துதி பாடுவதை விட, அவர் கொண்ட கொள்கை, நோக்கம், அதனை செயல்படுத்தும் விதமே யார் நமக்கானவன் என்பதை தமிழர்கள் நாம் சிந்தித்து ஆதரிக்க வேண்டும்.
-நாவலன் தமிழன்

இலக்கு ஒன்று தான், இனத்தின் விடுதலை.
நாமே மாற்று…! நாம் தமிழரே மாற்று…!!Gif-yarlfm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*