நல்லூர் கைலாசப்பிள்ளையார் ஸ்ரீ கைலை நாயகிக்கு புதிய இராஜகோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு வைபவம்.

நல்லூர் கைலாசப்பிள்ளையார் கோவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6. 30 மணி தொடக்கம் 7. 30 மணி வரையுள்ள சுப வேளையில் ஸ்ரீ கைலை நாயகிக்கு new-Gif1புதிய இராஜகோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு வைபவம் இடம்பெற்றது.
விசேடமாக 108 சங்கு ஸ்தாபனமும் நடைபெற்றது. இவ் வைபவத்தில் வட மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன், கோவிலின் பரம்பரை நம்பிக்கைப் பொறுப்பாளரும் ஆதீன கர்த்தாவுமான பிரம்மஸ்ரீ கு.குருசாமிசர்மா, பிரம்மஸ்ரீ கு.கோபாலன் குருக்கள், கோவிலின் பிரதம குருக்கள், சிவஸ்ரீ சுகுமாரக் குருக்கள், கோவிலின் பிரதம சாதகாச்சாரியார் பிரம்மஸ்ரீ சு. நவநீதன் சர்மா, கோவிலின் சிற்பாச்சாரியார் கங்கை அமரன், கங்கை ரூபன் ஆகியோரும் கைலாச நாதரின் அடியார்களும் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ கைலாசநாதரின் ஆக்ஞைப்படி ஸ்ரீ கைலாச பிள்ளையார் இம் மூன்றாம் கைலாசத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் ஸ்ரீ கையிலை நாயகிக்கு கைலாசகோபுரம் அமைக்க கட்டளை இட்டுள்ளார்.
இதற்கமைய யாழ்ப்பாண இராஜதானியை நிறுவிய ஆரியச்சக்கரவர்த்திகளின் அரச கோயிலாகவும் கோபுரத் த்வார மாட வீதிகள் கொண்ட பெருங்கோயிலாகவும் யாழ்ப்பாண இராஜதானியின் முதன்மைக் கோயிலாகவும் விளங்கியதென கைலாய மாலையில் போற்றப்பட்டுள்ள இக்கோயிலின் புராதனச் சிறப்பைப் பேணும் வகையில் மீண்டும் புதிய ராஜ கைலாச கோபுரங்கள் அமைக்கும் பெரும் திருப்பணிகள் கைலாச நாதரின் அனுக்ரஹத்துடன் ஆரம்பிக்கப்படுகின்றன.
எனது முன்னோர்களால் கோயிலுக்காக எழுதப்பட்ட சாஸ்திர விதிக்கமைவாகவும் வடமேற்கு மூலையில் அமைந்திருக்கும் பஞ்சமுகப் பிள்ளையாரின் ஸ்தான விதிப்படியும் கோயிலின் கட்டட அமைவுகளுக்கான ஆகமப் பிரமாணங்களின் பிரகாரமும் கையிலை நாயகிக்கே இக்கோயிலில் முதற்கோபுரம் அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ள காரணத்தினால் கையிலை நாயகிக்கு கைலாச கோபுரம் அமைப்பதற்கான மங்களாரம்பம் ஸ்வஸ்தி ஸ்ரீ நிகழும் மன்மத வருஷம் புஷ;யமாசம் எனச் சிறப்புப் பெறும் தைத்திங்களின் மதிவளர் பஷம் நிறைமதி நாளின் பூச நட்சத்திரம் நிறைந்திருக்கும் தைப்பூச நன்னாளாகிய ஞாயிற்றுக்கிழமை (24.01.2016) காலை 06.30 முதல் 07.30 வரை கோதுளிகா முகூர்த்தத்தில் பூமிபூஜை சங்குஸ்தாபனம் என்பன நடைபெற்று ஸ்ரீ கைலாச நாதரினதும் ஸ்ரீ கையிலை நாயகியினதும் ஸ்ரீ கைலாச பிள்ளையாரினதும் ப்ரத்யஷ அனுக்கரஹத்துடன் ஸ்ரீ மணிக்குருக்களின் மானசீக ஆசீர்வாதத்துடன் கைலாச கோபுரத்தைத் தாங்கி நிற்கவென பூஜிக்கப்பட்ட முதலாவது அத்திவாரக்கல்லின் ஸ்தாபனமும் மந்திரபூர்வமாக நடைபெறத் திருவருள் கைகூடியுள்ளது, தொடர்ந்து திருப்பணி நடைபெறும் இந்த தெய்வீக திருப்பணிக்கு கைலாசநாதரின் அடியவர்கள் ஸ்ரீ கையிலை நாயகிக்கு பாதகாணிக்கையாக நிதி, பொருட்கள் சமர்ப்பிக்கலாம்.
‘கைலாச கணபதிக்கோர் கோபுரம் காணீர்
கைலாச நாதருக்கோர் கோபுரம் காணீர்
கைலாச நாயகிக்கோர் கோபுரம் காணீர்
கைலாச கோபுர முன்றுள்ள திதுதானே’
‘நற்றுணை யாவது நமசிவாயவே’
கு.குருசாமி சர்மா
ஸ்ரீகைலாச பிள்ளையார் கோயில்,
பரம்பரை நம்பிக்கை பொறுப்பாளரும், ஆதீனகர்த்தாவும்.
படங்கள் – ஐங்கரன் சிவசாந்தன்DSC_0538 DSC_0553 DSC_0557DSC_0560 DSC_0561 DSC_0564DSC_0568 DSC_0581 DSC_0588 DSC_0591Gif-yarlfm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*