பரிஸ் நகரசபை அங்கீகாரத்துடன் நிகழ்ந்த பிரான்சு தமிழர் திருநாள் பெருவிழா நிகழ்வுகள் !

புலம்பெயர் தமிழர்களின் தமிழர் திருநாளுக்கு முன்னோடியாக new-Gif1அமைந்த பிரான்சு தமிழர் திருநாளின் பத்தாவது பெருவிழா நிகழ்வு பாரிஸ் 2 நகராட்சியின் அங்கீகாரத்துடன் வெகுசிறப்பாக இடம்பெற்றுள்ளது.
தமிழர்கள் அனைவரும் ஒருத்துவமாக சங்கமிக்கின்ற பொதுப்பொங்கல் நிகழ்வாக இடம்பெற்றிருந்த இப்பெருவிழாவினை, தமிழர் பண்பாட்டுத்தளத்தில் செயலாற்றி வருகின்ற சிலம்பு அமைப்பு முன்னெடுத்திருந்தது. பத்துக்கும் மேற்பட்ட பொது அமைப்புக்கள் கூட்டாக பங்காற்றியிருந்தன.
ஆய்வரங்கம், பொதுத்திடல், அரங்காற்று என மூன்று தளங்களில் சனவரி 16 – 17ம் திகதிகளில் இப்பெருவிழா இடம்பெற்றிருந்தது.
பிரென்சு மற்றும் வெளிநாட்டு அரசியற் பிரதிநிதிகளான Mr Joel Rault (மொரிசியஸ் தூதரக அம்பசாடர்) – Mr  Manish Prabaht (இந்திய தூதரக துணை உயர் அதிகாரி) – Mme Pauline Ferari (செசல் தூதரக துணைத் தூதுவர்) – Mr Olivier Stern ( முன்னாள் அமைச்சர் – பிரான்சு) – Mr Jacques Boutault (பரிஸ் 2 நகரசபை உயர் பிரதிநிதி) – Mr Jerome  Gleizes   (பரிஸ் பெருநகரசபை பிரதிநிதி) – Mr Ravishankar (இல் டு சென்தனி நகரசபைப் பிரிதிநிதி) – Mr Jules Capro Placide(பரிஸ் பெருநகரசபை தொழில்நுட்பத்துறைப் பிரதிநிதி) ஆகியோர் பங்கெத்திருந்தனர்.
கலாநிதி பார்வதி கந்தசாமி (தமிழ்ப் பேராசிரியை – மொழியியல் அறிஞர்- கனடா) மற்றும் உலகத் தமிழ் அறிவிப்பு மேதை பி. எச். அப்துல் ஹமீத் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக பங்கெடுத்திருந்தனர். பிரான்சு தமிழர் சமூக அரசியற் பிரதிநிதிகள் பலரும் பங்கெடுத்து சிறப்பித்திருந்தனர்.
முதன்நாள் பரிஸ் 2 நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்த ஆய்வரங்கத்தினைத் தொடர்ந்து சனவரி 17ம் நாள் வெளித்திடல் நிகழ்வுகளும், அரங்காற்றுகை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.
வெளித்திடல் நிகழ்வுகள் : 
பரிஸ் 2 நகரசபைத் திடலில் தமிழர்களின் பண்பாட்டினை வெளிக்காட்டும் அலங்கார வளைவுகள் விரவியிருக்க, மூத்தவர்கள் மற்றும் புலத்தில் பிறந்த இளையவர்கள் என தலைமுறைகளின் கூட்டுக் கொண்டாட்டமாக ஆடல் பாடலென, தமிழ் முறைப்படி இல்வாழ்வு இணைந்த சிந்துயன் – கார்த்திகா தம்பதிகள பொங்கலிட்டனர்.
பறையிசை, கரகாட்டம், காவடியாட்டம், கும்மியாட்டம் என நரகரசபை வளாகம் விழாக் கோலமாகயிருக்க, தமிழர்களின் தொன்மங்களை வெளிக்காட்டும் கண்காட்சிகள், கோலமிடல் போட்டி, தமிழர் உணவுகள் என பல்வேறு விடயங்கள் நிகழ்வினை அலங்கரித்தன.
பறையிசையும் பாடலும் முழங்க, கரக, காவடி அணிவகுப்புடன் பொங்கலிடப்பட்ட பானை அணிவகுப்பாக நகரசபை கண்காட்சி மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிறப்பு அதிதிகளின் மதிப்புக்கும் மாண்பும் நிறைவேற்றப்பட்டது.
அரங்காற்றுகை :
பறை இசையரங்கம், தப்பாட்டம், தமிழிசை அரங்கம், நாடகம், கூத்து, பல்வகை நடனங்கள் என அரங்காற்றுகை அரங்கம், தமிழர்களின் கலைத்துவ தொன்மத்தினை நிகழ்கலைகளாக வெளிக்காட்டியிருந்தன.4 8 76 5 32 1 10Gif-yarlfm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*