இலங்கை வருகிறது இந்தியாவின் மிகப்பெரிய விமானந்தாங்கிப் போர்க்கப்பல்

இந்தியக் கடற்படையின் பாரிய விமானம் தாங்கிப் போர்க்கப்பலான ‘ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா’,new-Gif1 நாளை மறுநாள் கொழும்புத் துறைமுகத்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக, இந்தியத் தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த மூன்று பத்தாண்டுகளின் பின்னர் கொழும்புத் துறைமுகத்துக்கு வரவுள்ள முதல் விமானம் தாங்கிப் போர்க்கப்பலான ‘விக்கிரமாதித்யா’வுக்கு பெரியளவில் வரவேற்பை அளிக்க சிறிலங்கா கடற்படை ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

கடைசியாக அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல் ஒன்று 1985ஆம் ஆண்டு கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருந்தது.

அதற்குப் பின்னர், கொழும்புத் துறைமுகத்துக்கு வரவுள்ள, முதல் விமானந்தாங்கிக் கப்பலான ‘விக்கிரமாதித்யா’, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டில் இந்தியக் கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது.Gif-yarlfm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*