‘பேரவை கலைக்கப்பட்டது’ என்ற பரப்புரைகளை நம்பவேண்டாம்:தமிழ் மக்கள் பேரவை

தமிழ் மக்கள் பேரவை கலைக்கப்பட்டுவிட்டதாக வெளிவரும் செய்திகள் தவறானவை என்பதைnew-Gif1 தமிழ் மக்கள் பேரவையின் ஏற் பாட்டுக்குழுதெரிவிக்கின்றது. தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடு களைமுடக்கும் நோக்கில் வெளியிடப்படும் இப்பரப்புரைகளைப் பொது மக்கள் நம்பவேண்டாம் எனதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக் குழுகேட்டுக் கொள்கின்றது.

இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக்குழு நேற்று விடுத்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

தமிழ் மக்கள் பேரவை அது தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே அதற்கு கட்சியரசியல் நோக்கமில்லை எனவும் அரசி யலை மக்கள் மயப்படுத்தலே தமது நோக்கம் எனவுந்தெளிவாகத் தெரிவித்து அதன் பிரகா ரம் நடந்தும் வருகின்றது.

எனினும் துரதிர்ஷ்டவசமாக தமிழ் மக்கள் பேரவையைத் தொடர்ந்தும் கட்சியரசியல் நோக்கில் பார்ப்போரும் அரசியல் மக்கள் மயப்படுத்தப்படுவதை எதிர்ப்போரும் பலவிதமான விசமத்தனமான பிரசாரங்களைச் செய்து வருகின்றனர். அவற்றின் ஒருபாகமே தமிழ் மக்கள் பேரவை கலைக்கப்பட்டு விட்ட தாகவெளிவரும் செய்திகள்.

இவர்களின் அநாகரிகமான பிரசாரங்களை சில ஊடகங்களும் வெளிப்படுத்தி வருகின்றமை வருந்துதற்குரியது. தமிழ் மக்கள் பேரவை தொடர்ந்தும் அமைதியாகத் தனது பணியை முன்னெடுத்துச் செல்கின்றது என்பதனை இச் செய்தியறிக்கை மூலம் உறுதிப்படுத்து கின்றோம்.

இனப் பிரச்சினைக்கான தீர்வை தமிழ் மக்களின கலந்தாலோசனையுடனும் பங்கு பற்றலோடும் உருவாக்கும் பேரவையின் முயற்சி தொடர்பில் வடக்கு மாகாண சபை முதல்வரும் பேரவையின் இணைத் தலை வருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் மிகவும் உறுதியாக உள்ளார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை தயாரிப்பதில் பேரவையின் உப குழு தனது பணிகளை செவ்வனே தொடர்ந்து செய்து வருகின்றது. அக்குழு தனது பணிகளை முடித்தவுடன் அந்த ஆவணம் மக்கள் கலந்தாய்வுக்காக விடும் செயன்முறை ஆரம்பமாகும்.

தமிழ் மக்கள் பேரவைதொடர்பில் தகவல் களைப் பெற 0756993211 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.Gif-yarlfm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*