இந்திய திரைப்பாடலுக்கு நிகராக பிரான்ஸ்சில் உருவாகும் “கல்லறையில் கருவறை” பாடல்..

இந்திய சினிமாவின் திரைப்பாடல்களுக்கு நிகராக பிரான்ஸ் பரிஸில் வாழும் தமிழ் கலைஞர்களால் “கல்லறையில் கருவறை” எனும் பாடல்new-Gif1 காட்சி உருவாக்கப் பட்டு வருகின்றது.
பிரான்ஸ்  AS film style சுபாஸ் தயரித்து இயக்கும் இப்பாடலுக்கு வரிகளை லதீப் பாலசுப்ரமணியம் எழுத இப்பாடலுக்கு தென்னிந்தய இசை அமைப்பாளரான அக்னி கணேஷ் அவர்கள் இசையமைக்க தென்னிந்திய திரைப்பட பின்னனி பாடகர் ராகுல் அவர்கள் பாடி இருக்கின்றார்.
முற்று முழுதான ஒரு காதல் காவியமாக உருவாக்கப்பட்டு வரும் இப்பாடல்  காதலர் தினமான பெப்ரவரி 14 அன்று வெளியிடப்பட இருக்கின்றது.
இப்பாடல் காட்சியில் சுபாஸ் மற்றும் “காதல் நாயகன்” ஜெய்வி நடிக்க கதாநாயகியாக வலம் வருகிறார் 2014 ஆண்டு Miss India France Best Smile எனும் பட்டத்தை வென்ற காயத்ரி நடிக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்பாடலின் காட்சிகள் பிரான்ஸின் முக்கிய மற்றும் மைய பகுதிகளில் படமாக்கப்பட்டு வருவதுடன் “கல்லறையில் கருவறை”பாடலின் first look poster  இணை தமிழ்ர் திருநாளாம் தைதிருநாள் அன்று AS film style நிறுவனம் அதிகார  பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இப்பாடலின் first look poster  வெளியாகி சில மனி நேரங்களுக்குள் சமுக வலைத்தளங்களில் அமோக வரவேற்பை பெற்றுள்ளதுடன் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ThankYou 
Director
Tamil Media Houseposter
Gif-yarlfm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*