பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஈழத் தமிழ் மக்களுக்கான நட்புறவுக் குழு ஏற்பாட்டில் பிரான்ஸ் பாராளுமன்ற வளாகத்தில் தமிழ் அமைப்புக்களுடனான சந்திப்பு .

பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஈழத் தமிழ் மக்களுக்கான நட்புறவுக் குழு ஏற்பாட்டில் பிரான்ஸ் பாராளுமன்ற வளாகத்தில் தமிழ்new-Gif1 அமைப்புக்களுடனான சந்திப்பு
09-12-2015 நடைபெற்றது
இன்றைய சந்திப்பு சென் செந் தெனிஸ் பாராளுமன்ற உறுப்பினரும், ஈழத்தமிழ் மக்களுக்கான பாராளுமன்ற நட்புறவுக் குழுவின் தலைவியுமான திருமதி. மரி ஜோர்ஜ் புவே (ஆயசநை புநழசபந டீரககநவ) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
தாயகத்தில் கணவனை இழந்த பெண்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள்,  சிறுவர்கள், முன்னாள் போராளிகள், முதியோர்கள் மற்றும் இடம்பெயர்ந்து இன்று வரை வாழும் மக்களின் அவலங்கள் பற்றியும், ஆட்சி மாற்றத்தின் பின்னரும் தமிழ் மக்களுக்கான எவ்வித அரசியல் தீர்வும் முன்வைக்கப்படவில்லை என ஏனைய அமைப்புக்களால் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.
தாயக மக்களின் அபிலாசைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில், தீர்வினையும், வாழ்வியல் மேம்பாட்டையும் பெற்றுக்கொடுக்கும் வழிமுறைகள் பற்றி ஆராய்ந்து, பிரான்ஸ் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக திருமதி. மரி ஜோர்ஜ் புவே (ஆயசநை புநழசபந டீரககநவ) அவர்கள் தெரிவித்தார்.
மரியாதையின் நிமிர்த்தம் நடைபெற்ற இச்சந்திப்பில் பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் தமிழ்த் தேசியம் சார்ந்த ஏனைய தமிழ் அமைப்புக்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஒன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் – பிரான்ஸ்01 02Gif-yarlfm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*