பாரிஸில் திவிரவாதியால் கத்திக்குத்துக்கு இலக்கான ஈழத்தமிழரின் விரிவான வாக்குமூலம் (படங்கள் இணைப்பு)

பிரான்ஸ் பாரிஸில் ஈழத்தமிழர் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதியால் கத்திக்குத்துக்கு இலக்காகி இராணுவ வைத்தியசாலையில் new-Gif1அவசரப்பிரிவில் சிகிச்சை பெற்றதென்று நாங்கள் முன்னைய செய்தியில் அறிவித்திருந்தோம். அந்த ஈழத்தமிழரின் விரிவான வாக்கு மூலம் ஒன்றை நாம் பெற்றுக்கொண்டோம் .

அதன் முழுவிபரம் வருமாறு.

பாரிஸின் போத்தொறுளியோன் (porte d’orleons) metro ligne 4 பகுதியில் தாக்குதல் நடந்த அன்று 20.12 க்கு நான் பேரூந்தில் செல்வதற்காக பேரூந்து தரிப்பிடத்தை நோக்கி செல்லும் வழியில் அராப் இனத்தவர் ஒருவர் தன்னை கதை கேட்டதாக கூறினார்.

பின்னர் குறித்த நபர் என்னை பின் தொடந்து வந்தார் சில மணித்துளிகளில் என்னுடன் கதைப்பதற்கு முற்பட்டார். நான் திரும்பி பார்த்த வேளை என்னிடம் சிகரெட் தருமாறு கூறினார் நான் சிகரெட் இல்லையென்று கூறினேன். பின்னர் எனது தாய்நாடு மொழி ஆகியவற்றை விசாரித்தறிந்து சாதரணமாக பேசத்தொடங்கினார். அதன் பின்னர் தான் ஐஎஸ் ஐஎஸ்
பிரிவைச் சேர்ந்தவன் எங்களுடன் இணைந்து பணியாற்றுவியா? என முதலில் கேட்டான் நான் மறுத்தவிட்டு பேரூந்து தரிப்பிடத்தை நோக்கிச் சென்றேன்.suman13

அவனும் என்னை பின் தொடந்து வந்தான் நான் விலகிச் செல்ல முற்பட்ட போதும் என்னை திரும்ப திரும்ப வருவியா?என்ற கேட்டான் நான் உனக்கு தலை பிரச்சனையா?என்று கேட்டு விட்டு பேரூந்து தரிப்பிடத்தை நோக்கி சென்றடைந்தேன்.

எனக்கு எதிர்த் திசையில் பிரஞ்சு நாட்டவர் ஒருவர் பேரூந்துக்காக வந்தார் அவர் கிட்ட வரும் போது தீவிரவாதி என்னை தாக்கும் நோக்கத்துடன் சுற்றி சுற்றி கிட்ட வந்தான் நான் தீவிரவாதியை மடக்கிப் பிடித்து வைத்தக்கொண்டு பிரஞ்சு நாட்டவரிடம் இவர் ஐஎஸ் ஐஎஸ் அமைப்பைச் செர்ந்தவர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து அழையுங்கள் என்று கூறினேன்

சற்றும் எதிர் பாரதவிதமாக என்னை தள்ளிவிட்டது போல் இருந்தது (அந்த நேரம் என்னை கத்தியால் குத்திவிட்டான் நான் பதட்டம் காரணமாகவும் இரவுவேளை குளிர் அதிகம் என்றபடியாலும் உணரமுடியவில்லை) பேரூந்தும் வந்து விட்டது பிரஞ்சு நபர் முதலில் பேரூந்தில் ஏறு ஓடும் நபர் தான் ஐஎஸ் ஐஎஸ் இயக்கத்தை சேர்ந்தவன் எங்களை யாரும் பிடிக்க முடியாது என்னு கத்திய படி ஓடுகின்றான் இந்த இடத்தில் பாதுகாப்பு இல்லை வா என கூறினார்.

பேரூந்தில் ஏறியவுடன் எனதருகில் அமர்ந்து என்ன விடயம் நடந்தது என கேட்டறிந்து கொண்டிருக்கையில் இரண்டாவது தரிப்பிடம் வந்துவிட்டது. சற்றும் எதிர்பாராத விதமாக மீண்டும் அவன் இரண்டாவது தரிப்பிடத்தில் ஏறினான் நாங்கள் இருவரும் இவனைப் போல் இருக்குது என கதைத்க அவனும் எங்களைப் பாத்தவுடன் இறங்கி ஓடத்தொடங்கினான்.suman 022

பிரஞ்சு நபர் அவனை அடையாளம் கண்டவுடன் பேரூந்து ஓட்டுனரிடம் பேரூந்தை நிறுத்தும் படி உரத்துக் கத்தினார் பேரூந்து ஓட்டுனரிடம் நாங்கள் இருவரும் நடந்ததை சொல்ல போகும் போது முதுகில் வலி ஏற்பட்டது பிரஞ்சு நபர் சென்னார் உன் உடையிலிரந்து இரத்தம் வருகிறது என கூறும்போது தான் நானும் பார்த்தேன்.
பிரஞ்சு நாட்டவர்கள் இருவரும் காவல்துறையினருக்கு தகவல் சொன்னார்கள் வேகமாக தேசிய காவல்துறையும் அவசரப்பிரிவு காவற்த்துறையும் மருத்துவப்பிரிவினரும் வந்து அந்தடைந்தனர்

பிரஞ்சு நபரிடம் விசாரித்து கொண்டிருக்கும் போது எனக்கும் மருத்துவப்பிரிவினர் முதலுதவி சிகிச்சை நடத்தினர் பின்னர் அவசரமாக இராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவசரப்பிரிவில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்தேன். பின்னர் இரு நாட்களின் பின் 22\12 பிற்பகல் வீடு வந்தடைந்தேன் ஆனாலும் எனது காயம் ஆறும் வரை இரு நாட்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனைக்கு வரும் படி கூறியுள்ளனர்.

மேலும் குறித்த ஈழத்தமிழர் பாரிஸில் பல ஊடகங்களிலும் படப்பிடிப்பாளராக கடமையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு :- இந்த செய்தியை பல தனி நபர்கள் விமர்சிப்பதாகவும் தனக்கு மனவருத்தம் தருவதாகவும் கூறினார்.Gif-yarlfm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*