சிம்புவின் ஆபாச பாடலை இணைய தளத்தில் வெளியிட்டது யார்? சென்னை போலீசார் யூடியூப்புக்கு கடிதம்

ஆபாச பாடல் தொடர்பாக சிம்பு, அனிருத் மீது போலீசார் நடவடிக்கைnew-Gif1 எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார்கள் அளிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் சிம்பு, அனிருத் மீது தகவல் தொழில் நுட்ப முறைகேடு தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 2 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதன் மீது போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர். ஆபாச பாடலை தனது வீட்டில் இருந்து யாரோ திருடி வெளியிட்டு விட்டனர் என்றும் நான் அதிகாரபூர்வமாக அதனை வெளியிடவில்லை என்றும் சிம்பு கூறி இருக்கிறார். இதையடுத்து இணைய தளத்தில் அந்த பாடல் எப்படி வெளியானது? வெளியிட்டவர் யார்? போன்ற விவரங்களை தெரிவிக்கும்படி ‘யூடியூப்’ நிறுவனத்துக்கு சைபர் கிரைம் போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர்.BBC-Magazine_Mega-Tsunami-_Sketch31

சென்னையில் இருந்து வெளியிடப்பட்டதா? வெளிநாட்டில் இருந்து வெளியிடப்பட்டதா? என்றும் விளக்கம் கேட்டு உள்ளனர். சிம்பு-அனிருத் இருவரிடமும் நேரில் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டு உள்ளனர். சம்மன் அனுப்பி விசாரணை நடத்துவதா? அல்லது வீட்டில் சோதனை நடத்தி சிம்பு பாடல்களை பதிவு செய்து வைத்துள்ள கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்வதா? என்று போலீசார் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் மீது தமிழ்நாடு பால்முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி கொடுத்த புகார் அடிப்படையில்தான், சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்று பொன்னுசாமி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சைபர் கிரைம் போலீசார் முன்னிலையில் ஆஜர் ஆனார்.

அவரிடம் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் விசாரணை நடத்தினார். முன்னதாக பொன்னுசாமி, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘சிம்பு மீதும், அனிருத் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.Gif-yarlfm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*