பாரிஸில் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதியால் கத்திக்குத்திற்கு இலக்கான ஈழத்தமிழர்!! காவல்த்துறையினரால் மீட்பு. (படங்கள்)

பிரான்ஸ் பாரிஸில் நேற்றிரவு RER-B றொபின்ஷன் Robinson தொடரூந்துப் பகுதியில் ஈழத்தமிழர் ஒருவர் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத பிரிவின் ஒருவரால் கத்திக் குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் new-Gif1அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் பற்றி தெரிய வருவதாவது.

மகாலிங்கம் சுமன் என அழைக்கப்படும் ஈழத்தமிழர் நேற்றிரவு வேளை தொடரூந்தில் பயணம் மேற்கொள்ளும் போது அராப் இனத்தவர் ஒருவர் புகைப்பிடிப்பதற்காக சிகரெட் இருந்தால் தரும்படி கேட்டுள்ளார். இவர் (சுமன்) தான் புகைப் படிக்கும் பழக்கம் இல்லை எனவும் தன்னிடம் சிகரெட் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமுற்ற அராப் இனத்தவர் தன்னிடம் சண்டையிடும் நோக்கில் சுற்றி சுற்றி வந்ததாகவும் தன்னை தாக்கும் எண்ணத்துடன் பார்பதாகவும் உணர்ந்த ஈழத்தமிழரான சுமன் இவர் சற்றும் வித்தியசமாக இருப்பதாக உணர்ந்து அவரைப் மடக்கிப் பிடித்து இவர் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதி இவரை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைப்போம் என கூறி அருகிலிருந்த பிரான்ஸ் இனத்தவரிடம் உடனே காவல் துறையினரை வரவழையுங்கள் என்று கூற அவர் உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

சற்றும் எதிர் பாரதவிதமாக தன் முதுகில் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஒடிய ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதி “ஒம் நான் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதி தான்” எங்களை யாரும் பிடிக்க முடியாது. நாங்கள் பிரான்ஸ் நாட்டை எங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவருவோம் அனைவரையும் வெட்டுவோம் என உரத்து கத்தியவாறு ஓடிச் சென்றுள்ளான்.

அந்த இடத்திற்கு விரைந்து வந்த தேசிய காவல்துறை, அவசர மருத்துவப் பிரிவு, தீவிரவாதி தடுப்புப் பிரிவினர் தன்னை அவசரமாக இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் மருத்துவமனை வாயிலில் சுமார் 15 மருத்துவர்கள் அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதித்து மருத்துவ சோதனைகள் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்தும்  அந்தப் பகுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல்கள் இடம் பெற்றுள்ளதுடன் பிரான்ஸ்  காவல்த்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்து வருகின்றது.

பிரான்ஸில் பல்வேறு ஊடகங்கள் வந்த போதும் காவல் துறையினரால் அனுமதி கொடுக்கவில்லையாம் தாக்குதலுக்கு இலக்கானவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார் அவருடைய பாதுகாப்பு காரணமாக அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளனர்.

மகாலிங்கம் சுமன் தான் வசித்துவரும் பிரான்ஸ் நாட்டிற்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக தன் உயிரைச் துச்சமென நினைத்து தீவிரவாதியை மடக்கிப் பிடித்த ஈழத்தமிழரால் பிரான்ஸ் வாழ் ஈழத் தமிழர்கள் பெருமையடைகின்றனர். பாதிக்கப்பட்டவர் இன்னமும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.suman07 suman11 suman12 suman13 suman04Gif-yarlfm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*