கமல்ஹாசன் எழுதி அவரே தயாரித்து இயக்கிய படம் “மருதநாயகம்”.. 18 ஆண்டுகளுக்குப் பிறகு!

கமல் நடிப்பில் பாதியில் கைவிடப்பட்ட மருதநாயகம் திரைப்படம்new-Gif1 தற்போது மீண்டும் உருவாகவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கமல்ஹாசன் எழுதி அவரே தயாரித்து இயக்கிய படம் மருதநாயகம்.

1997 ம் ஆண்டு தொடங்கபட்ட இப்படத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடித்தார். ஆனால் நிதிப்பற்றாக்குறை காரணமாக மருதநாயகம் படம் கைவிடப்பட்டது. அதற்குப்பின் மருதநாயகம் குறித்து எழுந்த கேள்விகளுக்கு அப்படத்தைத் தயாரிக்க யாராவது முன்வந்தால் படம் மீண்டும் தொடங்கப்படும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அய்ங்கரன் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மருதநாயகம் படத்தின் போஸ்டர் போஸ்டரை வெளியிட்டு இருந்தனர். இதனால் மருதநாயகம் பற்றி மீண்டும் தகவல்கள் வெளியாக ஆரம்பித்து இருக்கின்றன. மேலும் சில நாட்களுக்கு முன்னர் கமல் அளித்த பேட்டியில் லண்டனில் உள்ள தனது நண்பர் ஒருவர் இந்தப் படத்தை தயாரிக்க முன்வந்திருப்பதாக கூறியிருந்தார்.Gif-yarlfm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*