பிரான்ஸ் பாரிஸில் இலங்கைத் தமிழ் பழைய மாணவர்களால் நடத்தப்பட்ட பிரஞ்சு கல்வி கருத்தரங்கு. (படங்கள்,வீடியோ இணைப்பு)

பிரான்ஸில் வசிக்கும் இலங்கைத் தமிழ் பழைய மாணவர் ஒன்றியம் இணைந்து நடத்திய பிரஞ்சு மொழிக்கான பாடத்திறன் கருத்தரங்கு ஒன்றுnew-Gif1 லாச்சப்பல் பகுதியில் நேற்று நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் வடக்குக் கிழக்கு தமிழ் பழைய மாணவர்கள் திரு.முரளி, திரு.செல்வச்சந்திரன், திரு.மனோ, திரு.ஈஸ்வரநாதன் ஆகியோரும் பிரான்ஸில் கல்வி கற்று பல்கலைக் கழகம் சென்று கல்வி கற்றுவரும் திரு.சிவா, திரு.அச்சுதன், செல்வி. கீர்த்திகா, செல்வி.கஸ்தூரி ஆகியவர்களும் கலந்து சிறப்பித்தனர் மற்றும் இளையோர்கள் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என்று பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கல்விக் கருத்தரங்கில் பிள்ளைகளை வழிநடத்த வேண்டிய முறை பிரான்ஸில் கற்பித்தல் முறை மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகும் இடங்கள் படித்து முடித்த பின் வேலை தேடுவது பற்றியும் விசா இல்லாதவர்கள் படிப்பது எப்படி பற்றியும் அகதியந்தஸ்து பெற்ற ஒருவர் மேல்ப் படிப்பு படிப்பது எப்படி பொன்ற விவாதங்கள் கருத்துப் பகிர்வுகள் நடைபெற்றது.

உயர்கல்வி விரிவுரையாளர் திரு.ஈஸ்வரநாதன் கூறுகையில்
பிரான்ஸில் ஒருவர் தனது கல்வியைப் பூர்த்தி செய்யதற்கு அனைத்து விதமான உதவிகளையும் பெற்றுக் கொள்ளலாம் என்னும் அதன் முலம் தான் அடைந்த பலன்கள் பற்றியும் பிள்ளைகளின் கல்வித் தெரிவை பெற்றோர்களே தெரிவு செய்வது மிகவும் சிறந்த என சிறப்பான முறையில் உரையாற்றினார்.

பிரான்ஸில் கல்வி கற்று ,பாரிஸ் மற்றும் இலண்டன் பல்கலைக் கழகம் சென்று கல்வி கற்று வரும் செல்வி.கீர்த்திகா கூறுகையில்

தன்னடைய பாடத் தெரிவை தானே தெரிவு செய்து பல்கலைக் கழகம் சென்று படித்து முடித்த போதிலும் தொடந்து அரசியல் படிப்பதற்கு தான் இலங்கை அரசியலை தெரிவு செய்த போதிலும் தொடந்து படிப்பதற்கு மூத்த இலங்கை அரசியல் விரிவரையாளர் ஒருவரின் கையொப்பம் (அனுசரனை) இருந்தால் தான் பிரான்ஸில் கல்வியை தொடர முடியும் என்பதனால் தொடந்து கல்வி கற்க முடியவில்லை என்று தன்னுடைய கல்வி அனுபவத்தைக் கூறினார்.

திரு. செல்வச்சந்திரன் கூறுகையில்.
பாடசாலை மாணவர்களுக்குத்தான் தங்களுடைய தகமை அல்லது கல்வி நிலை பற்றி தெரியும் அதனால் அவர்களின் நிலையை உணர்ந்து அவர்களுக்கு உதவவேண்டும் என்று மிகத் தெளிவாக கூறினார்.

செல்வி கஸ்தூரி கூறுகையில்
தான் வைத்தியத் துறையில் தேர்ச்சி பெற்று பல்கலைக் கழகத்தில் படிப்பதாகவும் சிறிய வயதிலிருந்து தன்னடைய பெற்றோர்கள் தன்னடைய கல்விக்க உதவியாக இருந்ததாகவும் அதனால் தான் மேலும் கல்வியை தொடர வாய்ப்பாக இருந்ததாகவும் கூறினார்.

மற்றும் திரு.சிவா, திரு.அச்சுதன், திரு.முரளி ஆகியவர்கள் பாடத்தெரிவுகள் தொடர்பாகவும் அதன் வகைகள் தொடர்பாகவும் சிறப்புற தங்களுடைய அனுபவங்கள் தங்கள் கல்வியை தொடர எந்த வழிகள் இலகுவானது என்பதனையும் விளக்கினர்.

இறுதியில் பெற்றோர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக சில விவாதங்கள் இடம் பெற்றன அதளைத் தொடந்த யுத்தத்தால் பாதிப்புக்குள்ளாகி கல்லியை தொடர மடியாதவாறு இன்னல்ப்படும் மாணவர்களுக்கு உதவும் முகமாக சிறு உதவிகளையும் புலம்பெயர் பெற்றோர்கள் செய்ய வேண்டும் என்று தாழ்மையாக வேண்டி நின்றார்கள்.
DSC_0007 DSC_0010 DSC_0011 DSC_0012 DSC_0016 DSC_0018 DSC_0020 DSC_0024 DSC_0027 DSC_0031

jegan  04Gif-yarlfm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*