சுமந்திரனை எதிர்த்து குடத்தனை மக்கள் போராட்டம்

குடத்தனை வடக்கு மண்டப திறப்பு விழாவிற்கு வரும் சுமந்திரனை எதிர்த்து, அவ்வூர் மக்கள் ஒன்று கூடி தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மண்டபம் ஒன்றை திறக்க வரும் சுமந்திரனுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு , அங்கே எதிர்ப்பு பலகைகளையும் வைத்துள்ளார்கள். இதனால் பெரும் அமளி துமளி ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரனுக்கு தற்போது வட கிழக்கில் உள்ள மக்கள் பலர் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

இதனை அவர்கள் நேரடியாகவே வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளார்கள் என்பதே சந்தோஷமான செய்தியாக உள்ளது. புலம்பெயர் நாடுகளில் அதுவும் அவுஸ்திரேலியாவில் சுமந்திரனுக்கு நடந்த அதிர்ச்சி வைத்தியம் இன்று வட கிழக்கிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது., இது போன்ற வாசகங்கள் வடமராட்சி கிழக்கு மக்களால் எழுதி ஓட்டப்பட்டிருக்கின்றது.

ரணிலின் அரிச்சுவடியே வெளியேறு

விலைபோன விலைமகனே வெளியேறு

உலக ராஜதந்திர குள்ளநரியே வெளியேறு

காவிய நாயகர் கனவினை சுமக்கும் மண்ணில் இருந்து வெளியேறு…

தலைவனின் கொள்கையை எதிர்த்த சுமந்திரேனே

வெளியேறு!!!

சிங்களத்திடம் தமிழினின் மானத்தை விற்ற துரோகியே

வெளியேறு!!!

மாவீரர்களின் கனவுகளை சுமக்கும் மண்ணில் இருந்து

வெளியேறு!!!

துரோகிக்கு இந்த மண்ணில் இடமில்லை!!!

வெளியேறு!!! வெளியேறு!!! வெளியேறு!!!எதிர்த்து வடமராட்சி கிழக்கு எங்கும் பரவலாக ஒட்டப்பட்டிருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*