கூகுள் நிறுவனமானது புதிய டேப்லட்டினை இவ்வருட இறுதியில் அறிமுகம் செய்கிறது

கூகுள் நிறுவனமானது Google Pixel C எனும் புத்தம் புதிய new-Gif1டேப்லட்டினை இவ்வருட இறுதியில் அறிமுகம் செய்யவிருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந் நிலையில் குறித்த டேப்லட் எதிர்வரும் 8 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த டேப்லட் ஆனது 10.2 அங்குல அளவு, 2560 x 1800 Pixel Resolution உடைய தொடுதிரையினையும், Nvidia Tegra X1 Processor, பிரதான நினைவகமாக 3 GB RAM இணையும் கொண்டுள்ளது.

கூகுள் இறுதியாக அறிமுகம் செய்த Android 6.0 Marshmallow இயங்குதளத்தில் செயல்படக்கூடிய இந்த டேப்லட்டில் 32 GB மற்றும் 64 GB சேமிப்பு கொள்ளளவுடைய இரு பதிப்புக்களாக அறிமுகம் செய்யப்படவுள்ளது. 3

இதில் 32 GB சேமிப்பு கொள்ளளவுடையது 499 டொலர்களாகவும், 64 GB சேமிப்பு கொள்ளளவுடையது 599 டொலர்கள் உடையதாகவும் காணப்படுகின்றது.Gif-yarlfm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*