தேசிய மட்ட மாபெரும் உதைபந்தாட்ட இறுதிப் போட்டி( DIVISON 11)

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளத்தின் DIVISON 11 பிரிவில் யாழ்ப்பாணம் நாவாந்துறை  சென்மேரிஸ் ஏளு கொழும்பு நியூ லெவன் new-Gif1ஜங்ஸ்ரார் இவ்வரு அணியினரின் இறுதியாட்டம் 25.11.2015 புதன் கிழமை மாலை  அரியாலை யாழ் உதைபந்தாட்ட பயிற்சி மைதானத்தில் விறுவிறுப்பான முறையில் நடைபெற்றது. இவ்விறுதிப் போட்டியானது 45:45 ஆட்டமாகநேரம் நிர்ணயிக்கப்பட்டு ஆட்டம் ஆரம்பமாகின. ஆட்டம் மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஆக்ரோஷமாவும் நடைபெற்று முதல் ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் எந்தவித கோல்களும் போடாத பட்சத்தில் 90 நிமிட ஆட்டமானது 0:0 என்ற அடிப்படையில் சமனிலையில் முடிவுற்றது.

இவ்வாட்டத்தில் 75 நிமிடத்தில் சென்மேரிஸ் அணியின் சிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவரான ஜக்சன் என்பவர்க்கு நடுவரினால் முறையற்ற ஆட்டமென தீர்மானிக்கப்பட்டு முறையே மஞ்சள் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டு சென்மேரிஸ் அணியினர் மீதி ஆட்டத்தினை 10 பேருடன் ஆடியது குறிப்பிடத்தக்கது. பின்னர் வெற்றியினை தீர்மானிப்பதற்காக 10:10 நிமிடங்கள் கொடுக்கப்பட்டு. இவ்விரு அணிகளின் ஆட்டம் பார்வையாளர்களையும் ரசிகர்களையும் மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணம் ஆக்ரோஷமாக இருக்க முதல் பதியாட்டத்தில் கொழும்பு நியூ லெவன் ஜங்ஸ்ரார் அணியினர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பினை கோலாக்க 1:0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

சென்மேரிஸ் அணியின் ரசிகர்களின் முகங்களில் சகிர்க்க முடியாத ஒரு சோகத்தினையும் மைதானம் மயானமான முறையிலும் காணப்பட்டது குறிப்பிடதக்கது. இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியதும் நாவாந்துறை சென்மேரிஸ் அணியினர் கோலினைப் போடும் நோக்கில் 10 பேருடன் இன்னும் வேகமாக செயல்ப்பட்டு ஆட்டம் முடியூம் நேரம் ஒரு நிமிடத்திற்கு முன்னர் சென்மேரிஸ் அணியின் நிதர்சன் என்பவர் தனது சிறந்ததொரு உதையின் மூலம் கோலினை பெற்றுக்கொடுக்க ஆட்டமானது 1:1 என்ற அடிப்படையில் சம நிலையில் முடிவுற்றது.

பின்னர் வெற்றியாளர்களை தீர்மானிக்கும் வகையில் சம நிலை தவிர்ப்பு உதை வழங்கப்பட்டு 5:4 என்ற கோல் கணக்கில் நாவாந்துறை சென்மேரிஸ் அணியினர் தேசிய ரீதியிலான வெற்றியினை தனதாக்கி. யாழ் மாவட்டத்தில் மீண்டும் சிறந்ததொரு அணியென நிருபித்து. யாழ்மாவட்ட உதைபந்தாட்ட லீக்கிற்கு பெருமையினையும் பெற்றுக் கொடுத்தனர்.DSC_5471_1 DSC_5515_1 DSC_5534_1DSC_5549_1 DSC_5555_1 DSC_5559_1DSC_5591_1 DSC_5601_1 DSC_5607_1DSC_5617_1 DSC_5652_1 DSC_5801_1

Gif-yarlfm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*