மரண சாசனம் எழுதிவிட்டு ரயிலில் பாய்ந்து யாழ்.மாணவன் தற்கொலை

இன்று முழு இலங்கைக்கும் சோகமான நாள். அரசியல் new-Gif1கைதிகளுக்காக உலகமும், உள்நாடும்,  குரல் மட்டுமே கொடுத்து வந்த நிலையில், தன் உயிரையே கொடுத்த கோப்பாய் மாணவன்,

தமிழ் இயக்கத்தில் முதற் களப்பலியாகும் பெருமையை அணைத்துக்கொண்ட மாவீரன் லெப்.சங்கரை  போல, தமிழின வரலாற்றில் தனக்கும் ஓர் இடத்தினை பெற்றக்கொண்டுள்ளான்.

எத்தனையோ போராட்டங்கள், எத்தனையோ பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாத நிலையில், இறுதியாக தனது உயிரையே பணையம் வைத்த, 18 வயது மாணவனின் மரணத்தை பற்றி என்ன சொல்வது?

ஆட்சிகள் பல மாறியும் தமிழர்களின் அரசியல் கோரிக்கைகள் மாறவில்லை. காரணம் எந்த அரசாங்கமும் உரிமைகளை தருவதற்கு உடன்படவில்லை.

இனவாதமே அரசியலின் ஒத்தகருத்தாகிப்போன இலங்கையில், இன்னும் தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளுக்காக போராடுகின்ற நிலையே நீடிக்கின்றது.

தமிழின போராட்டத்தில் பல உயிர்களை இழந்து தவிக்கும் தமிழினம், தற்போது உயிருடன் இருக்கின்ற உறவுகளையாவது உடனிருக்க வேண்டுமென ஆசைப்படும் தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க அரசாங்கமும் தயாரில்லை, அதற்கு கடந்த அரசாங்கத்தின் கைக்கூலிகளும் உடன்படுவதாக இல்லை.

நல்லாட்சி அரசாங்கத்திடம் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி உயர்தரத்தில் கற்கும் மாணவன்  கடிதம் ஒன்றை எழுதிவிட்டு ஓடும் புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளான்.

18 வயதுடைய கோப்பாய் வடக்கு கோப்பாய் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் செந்தூரன் என்ற மாணவனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று காலை யாழ்.கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த புகையிரத வண்டிக்கு முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளான்.

குறித்த மாணவனின் சடலத்துடன், தற்கொலைக்கு முன் எழுதியுள்ள கடிதத்தினையும் கோப்பாய் பொலிஸார் மீட்டுள்ளனர்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

விடுதலையை கொடு ஒளியையூட்டு,

அதிமேதகு ஜனாதிபதி நல்லாட்சி அரசாங்கங்கள் அனைத்து அரசியல் கைதிகளையும் புனர்வாழ்வு அளித்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

ஒரு அரசியல் கைதியேனும் சிறையில் இருக்க முடியாது.

இந்த அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்ய வேண்டியதன் அவசியம் எனக்குப் புரிந்தும் கூட இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு இன்னும் புரியவில்லையே என்பது வருத்தமளிக்கின்றது.

என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் குறித்த மாணவனின் சுயவிபரமும் எழுதப்பட்டுள்ளது.

மாணவனின் உயரிய எண்ணங்களுக்கு ஆதரவு தெரிவித்தாலும், அவனுடைய தற்கொலை முடிவினை எம்மால் ஆதரிக்க முடியாது, ஆதரிக்கவும் கூடாது.

காரணம் இம்மாணவனை போன்று ஒவ்வொரு தமிழனும் உயிர்கொடுக்க ஆரம்பித்து விட்டால், தமிழ் மக்களின் கோரிக்கை வலுப்பெறாது, மாறாக தமிழ் மக்களின் எண்ணிக்கைதான் குறைவடையும்.

இருப்பினும் அப்பாடசாலை மாணவனின் மனதில் ஏற்பட்ட துயரங்கள் கூட சில அரசியல் மேதாவிகளுக்கு, புலப்படவில்லை என்பதே பரிதாபம்.News-GIF-maveetar2015

இருப்பினும் அந்த 18 வயது மாணவனின் பிஞ்சு மனதில் என்னென்ன எண்ணங்கள் ஓடியதோ?

இலங்கை அரசாங்கத்தினை நம்பி பயனில்லை என நினைத்தானோ?

பேச்சளவில் மாத்திரம் வீரம் காட்டும் தமிழின கட்சிகள் மீது நம்பிக்கை இழந்து விட்டானோ?

தமது சுயநலத்திற்காக மாத்திரம் போலி பாவனை காட்டும் சர்வதேச நாடுகள் மீது நம்பிக்கை இழந்தானோ?

தம்மை தாமே பல கோணங்களில் பிளவுப்படுத்திக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள் மீது நம்பிக்கை இழந்தானோ?

நிச்சயம் அரசியல் கைதிகள் விடயத்தில் அவன் யாரையும் நம்பவில்லை என்பதே உண்மை. அதனால்தான் ஆயுதத்தை தானே எடுத்துக் கொண்டுள்ளான்.

18 வயதே நிரம்பிய அம்மாணவனின் மரணத்திற்கு பின்பாவது பேரினம் சிறுபான்மை இனத்திற்காக விட்டுக்கொடுக்க தயாராகுமா? இல்லை அவனுக்காக அஞ்சலி மாத்திரம் செய்து, அரசியல் நடத்துமா?

வெறுமனே அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக கூறிய அரசாங்கம் கண்துடைப்பிற்காக 32 பேரை கடுமையான நிபந்தனையுடன் பிணையில் விடுவித்து, ஏனையவர்கயை புனர்வாழ்விற்கு உட்படுத்த போவதாக சொல்லி வருகின்றது.

இந்நிலையில் 217 அரசியல் கைதிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்தும் சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், காலி பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நால்வர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே மகசீன் மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிரித்தெடுக்கப்பட்ட இவர்கள் பின்னர் பூஸா முகாமில் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்க காலத்தின்போது கோத்தபாயவின் உத்தரவின்பேரில் அடைக்கப்பட்டனர்.

ஏனைய அரசியல் கைதிகளை போலல்லாது இவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் 15(1) பிரிவின்கீழ் விசேட அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

யுத்தம் முடிவடைந்ததுடன், செயளலவில் தமிழின விடுதலை போராட்டமே இல்லாமல் போய்விட்டது.

இருப்பினும் இன்னும் எம்மவர்கள் விடுதலை செய்யப்படாமல் அடைக்கப்பட்டு சித்திரவதைகளை அனுபவித்த வண்ணமே இருக்கின்றார்கள்.

இம்மாணவனின் மரணத்திற்கு பின்பாவது சில தமிழ் கட்சிகள் அரசியல் செய்வதனை கொஞ்சம் தள்ளி வைத்து, தமிழ் மக்களின் தேவைகளுக்காக உண்மையாக குரல் கொடுக்க தயாராக வேண்டும்.

கட்சியினை வளர்ப்பதனை நிறுத்திவிட்டு, தமிழ் மக்களின் ஆசைகளை பூர்த்தி செய்தவற்கு முற்பட வேண்டும்.

சர்வதேச நாடுகள் இராஜ தந்திரங்களை நிறுத்தி விட்டு, பேரினங்களின் தந்திரங்களில் சிக்கண்டுள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்க குரல் கொடுக்க வேண்டும்.

இழந்தது போது, இனியும் தமிழ் உயிர்கள் இழக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்.

உலகின் எல்லா இனங்களும், மதங்களும் தனது இனத்தின் எண்ணிக்கையினை அதிகரித்து, அரசியலில் பேரம் பேசும் சக்தியினை வளர்த்துக்கொண்டு இருக்கின்றது.

தமிழர்கள் மட்டும்தான் தனது நிலத்தினை அடுத்தவனுக்கும், தனது உயிரை அரத்தமற்றதாகவும் ஆக்கிக்கொண்டிருக்கின்றான்.

தமிழர்களே எமது கோரிக்கைகளுக்காக எமது உயிர்களை கொடுத்தது போதும், இனியும் தமிழர்கள் உயிரை கொடுப்பதால் அனுதாபம் மட்டுமே கிடைக்கும். அரசியல் உரிமைகள் கிடைக்கப்போவதில்லை.

விழித்திருந்து எமது கோரிக்கைகளை பெற்றுக்கொள்ள முயற்சி செய்வதே தற்போதைய காலத்தின் கட்டாய தேவையாகும்.

ரயிலில் மோதி சிதறியது அவனது உடல் மட்டும் அல்ல. தமிழர்களின் தேவை நிறைவடையும்  என்ற நம்பிக்கையும்தான்.Gif-yarlfm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*