கூட்டமைப்பின் கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றாவிட்டால் நிபந்தனைகளின்றி ஆதரவை நீக்குவோம்:செல்வம் அடைக்கலநாதன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை அரசாங்கம் new-Gif1நிறைவேற்றாவிட்டால் நிபந்தனைகளின்றி வெளியில் இருந்து வழங்கி வரும் ஆதரவை நீக்குவது குறித்து தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்படும் என, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எச்சரித்துள்ளார். வரவு செலவுத்திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பு மீதான மூன்றாவதுநாள் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இந்த வருடம் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்துக்கு தமிழ் மக்கள் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தனர். புதிய அரசாங்கத்தின் மீது தமிழர்கள் பாரிய நம்பிக்கை வைத்திருந்தனர். எனினும் அதனை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தவறிவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். நூறுநாள் அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சி னைகள் தொடர்பில் அக்கறை செலுத்தியிருந்தது. குறிப்பாக இராணுவத்தினர் வசமிருந்த பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது உள்ளிட்ட விடயங்களில் சாதகமான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இருந்த போதும் தற்போது ஆட்சியிலிருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அதே அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் இருப்பது கவலையளிக்கிறது. குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் அரசாங்கம் மந்த கதியில் செயற்பட்டு வருகிறது. 20 பேருக்கு புனர்வாழ்வு அளிக்கப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இவர்களில் ஒருவர் ஏற்கனவே புனர்வாழ்வு பெற்றவர். புனர்வாழ்வு வழங்கப்படவிருப்பவர்களுக்கு எதிராக ஒன்றுக்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

ஒரு வழக்கில் அவர்களுக்குப் புனர்வாழ்வு வழங்கப்பட்டாலும் புனர்வாழ்வின் பின்னரும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய சூழல் காணப்படுகிறது. எனவே அவர்களுக்கு எதிரான சகல வழக்குகளும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு அவர்களுக்குப் புனர்வாழ்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.News-GIF-maveetar2015

தமிழ் அரசியல் கைதிகளுக்குப் புனர்வாழ்வு வழங்குவதை நாம் வரவேற்கின்றபோதும் அவர்கள் சுதந்திரமாக விடுதலை செய்யப்பட்டு தமது வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வதற்கான நிலைமையை ஏற்படுத்தப்பட வேண்டும். இதனையே அவர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். இதுபோன்ற அரசாங்கத்தின் செயற்பாடுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது தமிழ் மக்களுக்கான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கம் தம்மை ஏமாற்றியதாக தமிழ் மக்கள் கருதுகின்றனர்.

இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் வெளியிலிருந்து வழங்கிவரும் நிபந்தனையற்ற ஆதரவை மறுபரிசீலனை செய்யவேண்டி ஏற்படும் என்று குறிப்பிட்டார்.Gif-yarlfm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*