சர்வதேச நாடுகளில் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை

தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க new-Gif1உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 13–ந் தேதி ஐ.எஸ்.தீவிரவாதிகள் 6 இடங்களில் தொடர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 130 பேர் பலியாகினர். 350 பேர் காயம் அடைந்தனர்.அதற்கு முன்னதாக லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் தாக்குல் நடத்தினர். மேலும் எகிப்தில் சினான் தீபகற்ப பகுதியில் ரஷிய பயணிகள் விமானத்தை குண்டு வைத்து தகர்த்தி 230 பேரை கொன்றனர். மாலியில் ஓட்டலில் தாக்குதல் நடத்தி 30 பேரை கொன்று குவித்தனர்.இது போன்று தொடர் தாக்குதல் உலக நாடுகளை ஐ.எஸ்.தீவிரவாதிகள் அச்சுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாரீசில் நடத்திய தாக்குதல் போன்று சர்வதேச நாடுகளில் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.News-GIF-maveetar2015

அல்கொய்தா தீவிரவாதி இயக்கம் உடைந்து அதில் இருந்து பிரிந்தவர்கள் ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தை உருவாக்கியுள்ளனர். எனவே, அவர்கள் தாங்கள் ஏற்கனவே செயல்பட்ட பகுதிகளில் ஐ.எஸ்.தீவிரவாத கிளைகளை அமைத்து விரிவுபடுத்தி வருகின்றனர். அங்கு மண்டல தலைவர்களை நியமித்து வருகின்றனர். வங்காள தேசத்தில் புதிதாக தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதுபோன்ற பல நாடுகளில் கிளைகளை அமைத்து தொடர் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே அமெரிக்காவில் வருகிற 26–ந் தேதி ‘நன்றி தெரிவிக்கும் விடுமுறை தினம்’ கடை பிடிக்கப்படுகிறது.அன்றைய தினம் அமெரிக்கர்கள் உலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து பொழுதை கழிப்பது வழக்கம். தற்போது ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஆங்காங்கே தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், அமெரிக்கர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து மிரட்டவும் திட்டமிட்டுள்ளனர்.எனவே, அமெரிக்கர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு செல்பவர்கள் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளில் மிகவும் கவனமாக இருக்கும்படியும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.Gif-yarlfm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*