சர்வதேச தமிழ்தேசியத் திரை விழா லாச்சப்பலில்

அன்பான எங்கள் தேசப்பற்றாளர்களே! சர்வதேச தமிழ்தேசியத் new-Gif1திரை விழா

காலம் 21.12.2014 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு

தங்கவயல் திரையரங்கம் (லாச்சப்பல்)

எமது தேசப்பற்றாளர்களின் ஏற்பாட்டில் பல கலை நிகழ்வுகளுடன் மூன்று முக்கிய திரைப்படங்கள் திரையிடப்பவுள்ளன.
தமிழ் (குறும்படம் ) எமது உயிரிலும் மேலானது எங்கள் தாய்மொழி தமிழ் அதன் அருமை பெருமைகளை அறியாது அதை அழிய விடாது காக்கின்ற ஈழத்தமிழ் மக்கள் தமிழ் நாட்டு தமிழ் உணர்வாளர்கள் படைப்பு காலத்தின் அவசிய குறும்படம்
யாவும் வசப்படும் ( எம் ஈழத்து கலைஞர்களின் படைப்பா இது என்று புருவத்தை உயரவைக்கும், மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு படைப்பு தேன்கூடு (தமிழீழ விடுதலைப்போரும், அந்த போராளிகளின் மனஉணர்வும், தியாகங்களும், சந்தித்த துரோகங்களும், அடங்கிப்போய் அடிமையாய் இருக்கும் தமிழனம் இன்னும் எத்தனை விலைகளைக் கொடுக்க வேண்டும் என்ற உண்மையினையும் விடுதலைப்போர் முற்றுப் பெறவில்லை News-GIF-maveetar2015ஒரு தமிழன் உலகில் வாழும் வரை ஒரு விடுதலைப்புலி உயிருடன் இருக்கும் வரை நம்பிக்கையோடு புலிகளின் தாரக மந்திரமாம் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்று முழக்கமிட்டு மண்ணில் வீழ்ந்தார்களே அந்த தாரக மந்திரத்தை தமிழரின் தாகமும் தமிழீழத் தாயகமே என்றும் மக்கள் புரட்சி வெடிக்கும் சுதந்திரத் தமிழீழம் மலரும் என்ற தியாக தீபம் திலீபனின் வாக்கியங்களுக்கு வலுச்சேர்க்கும் ஒர் இன உணர்க்காவியம் தான் தேன்கூடு படம்.

தமிழ்நாட்டு எம்சகோரர்களும் எமது தேசக்கலைஞர்களும் ஒன்று சேர்ந்து படைத்த உண்மைகாவியம். தாய்த்தமிழகத்தில் திரையிட பல்வேறு மட்டத்திலும் முயற்சி செய்து முடியாது போனது இப்படத்தை தயாரித்தவர்களும், அதற்கு பண உதவி செய்தவர்களும் ஆண்டுகள் 3 வருடங்கள் ஆகியும் தமிழீழ விடுதலைக்கு வலுச்சேர்க்கும் அடுத்த கட்டத்திற்கும் செயற்பாட்டிற்கும் முடக்கப்பட்ட ஒரு திரைக்காவியம்.
இது வியாபாரத்திற்கும் விளம்பரத்திற்குமானதொரு புலிப்பார்வை திரைப்படம் அல்ல. சிதைக்கப்பட்ட எமது இன தேன்கூடுகள் தேனீக்கள் ஒன்று சேரும். அனைவரும் இப்படங்களைப் பார்க்குமாறும் உணர்வுகளுக்கு உரம் ஏற்றிக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்
இந்த செய்தியை முடிந்த வரை உங்கள் முகப் புத்தகம் இணையத்தளங்கள் மூலம் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.Gif-yarlfm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*