மாவீரர் நாள்- ஈழப் போர் அல்லது இலங்கை உள்நாட்டுப் போர்-ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் – நினைவுறுத்தும் நாள் – நினைவுறுத்தும் நாள் .

விக்கிப்பீடியாவில் இருந்து.   

மாவீரர் நாள் என்பது தாய்/தந்தை நாட்டின் விடுதலைக்காகப் போராடி தமது உயிரை ஈந்த வீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் ஒரு நாள் ஆகும். இது உலகின் பல நாடுகளிலும் அந்தந்த நாட்டு வீரர்களுக்காக நினைவு கூரப்படுகிறது. ஒவ்வொரு நாட்டவரும் தத்தமக்கென ஒரு குறிப்பிட்ட நாளைத் தேர்ந்தெடுத்து அந்த நாளை மாவீரர் நாளாகப் பிரகடனம் செய்து இந்த அஞ்சலியைச் செய்வார்கள். குறிப்பிட்ட சில நாடுகளில் அந்த நாள் விடுமுறை நாளாகக் கூடப் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் லெப். சங்கர் (எ) சத்தியநாதன் என்ற முதல் மாவீரனின் நினைவு நாள் தான், நவம்பர் 27. விடுதலைப் புலிகளின் சிறந்த தளபதியாக விளங்கிய சங்கர் மீது சிங்கள இராணுவம் கடும் கோபம் கொண்டிருந்தது. 1982-ம் ஆண்டு இராணுவத்தின் தேடுதல் வேட்டைக்கு இலக்கானான். 1982-ம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ம் தேதியன்று சிங்கள இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்படுகிறார். சங்கர் தப்பி ஓட முயன்ற போது, வயற்றில் குண்டு பாய்கிறது. அப்படியும் சிங்கள இராணுவத்தினரிடம் சிக்காமல் தப்பிக்கிறார். மேற்சிகிச்சைக்காக தமிழகம் வருகிறார். ஆனால், சிகிச்சை பலனின்றி தலைவர் பிரபாகரனின் மடியிலேயே சங்கரின் உயிர் பிரிந்தது.News-GIF-maveetar2015

ஈழப் போர் அல்லது இலங்கை உள்நாட்டுப் போர் என்பது இலங்கை இனப்பிரச்சினை காரணமாக, தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட்ட இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறைப் போராட்டங்களையும், போர்களையும் முதன்மையாகக் குறிக்கின்றது. இப்போரானது சிங்களவருக்கும், தமிழருக்கும் இடையில் பல விடயங்கள் தொடர்பாக நிலவிவரும் பாரிய கருத்து முரண்பாடுகளின் மூலத்தைக் கொண்டதாகும். 23 யூலை 1983 முதல் 26 ஆண்டுகள் நடைபெற்ற இப்போர் 2009 இல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.

27 வருடங்களுக்கு மேலாக இப் போராட்டம் இலங்கை மக்களுக்கு கடும் துன்பத்தையும், சூழல், பொருளாதார ரீதியாக நாட்டிற்கு இழப்பையும் ஏற்படுத்தி 80,000–100,000 க்கு மேற்பட்ட மக்கள் இறப்புக்கும் காரணமாகியது. போரின் ஆரம்ப காலத்தில் இலங்கைப் படைகள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை மீளவும் கைப்பற்ற முனைந்தனர். அரசுக்கு எதிராக புலிகள் மேற்கொண்ட உத்திகள் தடையாக இருந்தாலும், புலிகளை அமெரிக்கா, இந்தியா, கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட் 32 நாடுகள் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டனர். இலங்கை அரச படைகள் திட்டமிட்ட மோசமான மனித உரிமை மீறல், பலவந்தமாக காணாமல் போதல், நீதிக்குப் புறம்பான செயற்பாடுகள் என்பவற்றுக்காக குற்றம் சாட்டப்பட்டனர்.

இரு தசாப்தங்களாக போர் மற்றும் தோல்வியுற்ற நான்கு சமாதானப் பேச்சு வார்த்தைகள், மற்றும் 1987 – 1990 காலப்பகுதியில் இலங்கையில் நிலை கொண்ட இந்தியப் படைகளின் தோல்வியில் முடிந்த பிரசன்னம் என்பவற்றின் பின் மார்கழி 2001 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டு, சர்வதேச மத்தியஸ்துடன் போர் நிறுத்தம் 2002 இல் மேற்கொள்ளப்பட்டது. ஆயினும், 2005 பிற்பகுதியில் முரண்பாடு ஆரம்பமாகி, பின்னர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக யூலை 2006 இல் அரசு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் புலிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து வெளியேற வேண்டி ஏற்பட்டது.

2007 இல் அரசாங்கம் தாக்குதலை வடபகுதிக்கு மாற்றி, 10,000 க்கு மேற்பட்ட தடவைகள் புலிகள் யுத்த நிறுத்தத்தை மீறியதாக குற்றச்சாட்டி ஒருதலைப்பட்சமாக யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது.இதன் மூலம் புலிகளின் தங்கள் தலைமைச் செயற்பாட்டிடமாக கொண்டிருந்த கிளிநொச்சி, பிரதான இராணுவ மையமாக இருந்த முல்லைத்தீவு, முழு ஏ9 நெடுஞ்சாலை ஆகிய இடங்களைக் கைப்பற்றி, தமிழீழ விடுதலைப் புலிகள் 17 மே 2009 அன்று தோல்வியுற்றனர். இதன் பின்னர் ஐ.நா.வினால் இலங்கை அரசும் புலிகளும் போர்க் குற்றம் புரிந்ததாக குற்றஞ் சாட்டப்பட்டனர். இதற்கான பதில் கூறலில் விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில் இலங்கை அரசு நெருக்கடிகளுக்கு உட்பட்டு வருகின்றது.News-GIF-maveetar2015

ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (Eelam Revolutionary Organization of Students) அல்லது ஈழப் புரட்சி அமைப்பு அல்லது ஈரோஸ் (EROS) எனும் பெயரால் 1970 களின் முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு ஈழப் போராட்ட தொடக்கக் காலம் முதற்கொண்டு செயற்பட்டு வந்த இயக்கங்களில் ஒன்றாகும். இந்த அமைப்பினுடைய ஸ்தாபகர் இ.இரத்தினசபாபதியாகும். இலங்கை, பாலஸ்தீனம், இந்தியா ஆகிய நாடுகளில் இந்த அமைப்பின் போராளிகள் ஆயுதப்பயிற்சி பெற்றிருந்தனர். சர்வதேச ரீதியாக அரசியற் தொடர்பாடற் கட்டமைப்பையும் ஈரோஸ் அமைப்புக் கொண்டிருந்தது. மூன்று உறுப்பினர்களை உள்ளடக்கிய நிறைவேற்றுக்குழுவே உயர்மட்டத்தீர்மானங்களை மேற்கொண்டது. வே. பாலகுமாரன், ப. விக்னேஸ்வரன்(நேசன்) சங்கர் ராஜி ஆகிய மூவருமே நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களாகச் செயற்பட்டனர்.

இலங்கை இந்திய உடன்படிக்கையின் பின்னர் ஈழப் புரட்சி அமைப்பு தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஈழவர் ஜனநாயக முன்னணி என்ற பெயரில் அரசியற் கட்சி ஒன்றினை இலங்கையில் பதிவு செய்திருந்தது. இந்தக் கட்சியின் சின்னர் கலப்பை (ஏர்) ஆகும். 1979 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டு 13 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது.

1990 ஆம் ஆண்டுவரை இயங்கி வந்த இந்த அமைப்பு விடுதலைப்புலிகளின் அழுத்தங்களினால் 1990 மே மாதம் 30 நாள் வே. பாலகுமாரனினால் உத்தியோகபுர்வமாகக் கலைக்கப்பட்டது. விரும்பியவர்கள் சுயாதீனமான முடிவுகளை எடுக்கலாம் என்ற அறிவித்தலுக்கு அமைய ஒரு தொகுதி உறுப்பினர்கள் வே. பாலகுமாரன் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்போடு இயங்கினர்.News-GIF-maveetar2015

தமிழீழ விடுதலைப் புலிகள் (Liberation Tigers of Tamil Eelam, LTTE) சுருக்கமாக விடுதலைப் புலிகள் என்பது, இலங்கையில் தமிழருக்கு ஏற்பட்ட இனவேற்றுமைகளுக்கு எதிராக இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடிய போராட்ட அமைப்பு ஆகும். இது இலங்கையில் தமிழீழம் என்ற பெயரில் தமிழருக்கான தாயகத்தை அமைக்கும் உறுதியுடன் 1976 களில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து போராடியது.[1][2] விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆவார்.

இந்தியா, மலேசியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம்,போன்ற 31 நாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ராசீவ் காந்தி படுகொலைக்கு மற்றும் பல கொலைச் சம்பவங்களுக்கு இவர்களே காரணம் என நம்பப்படுகிறது. 2001 இல் இருந்து 2005 வரை இலங்கை அரசுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் புலிகள் ஈடுபட்டனர். 2004 இல் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக இருந்த கருணா பிரிந்தார். 2005 இன் இறுதியில் போச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. 2007-இல் இருந்து உக்கிரமடைந்த போரில் புலிகள் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்தனர். மே 2009 இல் இலங்கைப் படைத்துறை புலிகளின் பெரும்பான்மை உறுப்பினர்களையும், மூத்த தலைவர்களையும் கொன்றனர். மே 2009-இல் புலிகள் தோல்வியை ஒப்புக் கொண்டனர். மே 24, 2009 இல் கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கிய பேட்டியில் புலிகளின் வையகத் தொடர்பாளர் குமரன் பத்மநாதன் புலிகள் ஆயுதப்போராட்டத்தைக் கைவிட்டு விட்டதாகவும், இனி சனநாயக வழியில் செயற்படப் போவதாகவும் தெரிவித்தார்.News-GIF-maveetar2015

நினைவுறுத்தும் நாள் (Remembrance Day) என்பது போரில் தமது உயிர்களைத் தியாகம் செய்த படைவீரர்களையும் மக்களையும் நினைவில் நிறுத்தும் நாள் ஆகும். இந்த நாள் நவம்பர் 11 இல் பொதுநலவாய நாடுகள் பலவற்றில் அவதானிக்கப்படுகிறது. இந்த நாளில் ஒரு பொப்பியை நினைவுக் குறியீடாக அணிவர். நினைவுறுத்தும் நாள் பல ஈழத் தமிழர்கள் அவதானிக்கும் மாவீரர் நாளுக்கு ஒத்தது.

முதலாம் உலகப் போர் முடிவில் பொதுநலவாய நாட்டு கூட்டுப்படைக்கும் செருமானியருக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இப் போர் நிறுத்தம் 1918ம் ஆண்டு, 11ம் மாதம், 11ம் திகதி, காலை 11 மணிக்கு நிகழ்ந்தது. இப்போர் நிறுத்தப்பட்டதையும் போரினால் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையிலும் அன்றிலிருந்து இந்த நாள் நினைவில் நிறுத்தப்படுகின்றது. [1]

இந்த நாள் ஐக்கிய இராச்சியத்தில் ஐந்தாம் சோர்ச் மன்னரால் நவம்பர் 7, 1919ம் ஆண்டு முதலாம் உலகப் போரில் உயிர்களைத் தியாகம் செய்த படைவீரர்களை நினைவுறுத்தும் நாள் எனப் பிரகடனப்படுத்தப்பட்டது.[2] எனினும் இன்று அனைத்துப் போரிலும் உயிர் நீத்தவர்களை இந்த நாளில் நினைவு கூறுவர்.

சிவப்பு நிற பொப்பி மலர்கள் இந்த நாளுக்குரிய சின்னமாக விளங்குகின்றது. பொப்பிச் செடிகள், கொடூரமான போர் நடைபெற்ற பிளாண்டர் எனும் இடத்தில் மிகையாகப் பெருகிக் காணப்பட்டன. இதன் சிவப்பு நிறம் போரில் சிந்திய குருதியின் நிறத்தை நினைவுபடுத்தியது. போர் மருத்துவரும் கவிஞருமான சோன் மாக்கிரே எனும் கனடிய வீரரின் “பிளாண்டர் புலத்தில்” எனும் கவிதையின் வரிகள் வீரர்களைப் புதைத்த இடங்களில் வளரும் பொப்பிச் செடிகளைக் குறிப்பிட்டது. இக்கவிதை மூலம் பொப்பி பிரபல்யம் அடைந்தது. நினைவுறுத்தும் நாளில் செயற்கையாக உருவாக்கப்பட்ட பொப்பிகளை அணிவது வழக்கத்தில் வந்தது.

கனடாவில் “லெஸ்ட் வீ போர்கெட்” (lest we forget) எனும் வாக்கியம் இந்நாளுடன் தொடர்புடையதாய் இருக்கின்றது, போர்த் தியாகிகளை ஒருபோதும் மறத்தலாகாது எனும் எச்சரிக்கையை இந்த வாக்கியம் தெரிவிக்கின்றது.

(ஈழத்தமிழர் இலிருந்து வழிமாற்றப்பட்டது) இலங்கையில், இலங்கைத் தமிழர் (Sri Lankan Tamils) என்னும் தொடர், இலங்கையைத் தமது மரபுவழிப் பிறப்பிடமாகக் கொண்டு வாழும் தமிழர்களைக் குறிக்கப் பயன்பட்டு வருகிறது. இலங்கையின் உத்தியோக முறை ஆவணங்களிலும் இந்தப் பொருளிலேயே இத் தொடர் பயன்பட்டு வருகிறது. இவர்களை இலங்கை வம்சாவழித் தமிழர் எனவும் குறிப்பிடுவது உண்டு. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கோப்பி, தேயிலை தோட்டங்களில் பணி புரிதற்பொருட்டு தமிழ் நாட்டிலிருந்து கொண்டு வந்து குடியமர்த்தப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழரிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும் பொருட்டே வம்சாவழித் தமிழர் எனும் தொடர் பயன்படுத்தப்பட்டது. இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல் நூற்றாண்டுகளாகப் பெரும்பான்மையினராக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர் இலங்கையின் பிற பகுதிகளிலும் சிறுபான்மையாக வாழ்ந்து வருகின்றனர்.

பொதுப் பொருளில் இலங்கையில் குடியுரிமையுடைய, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அனைவருமே இலங்கைத் தமிழர் ஆதல் வேண்டும் எனினும், இலங்கையைப் பொறுத்தவரை, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இலங்கை முசுலிம்கள் மொழிவழியே தம்மை அடையாளம் காண்பதில்லை. அவர்களை இலங்கை முசுலிம்கள் என வகைப்படுத்துவது வழக்கமாக உள்ளது. இதனால் தமிழ் பேசும் முசுலிம்களும், முன்னர் குறிப்பிட்ட அண்மையில் இலங்கையைத் தாயகமாக ஏற்றுக்கொண்ட மலையகத் தமிழர்களும், இலங்கைத் தமிழர் என்னும் வகைப்பாட்டினுள் அடங்குவது இல்லை. பிரதேசம், சாதி, சமயம் முதலியன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில், இலங்கைத் தமிழரிடையே வேறுபாடுகள் காணப்பட்டாலும், மொழியாலும், வேறு பல அம்சங்களின் அடிப்படையிலும் ஒரே குழுவாக இலங்கையின் பிற இனத்தவரிடம் இருந்து தனித்துவமாகக் காணப்படுகின்றனர்.

1948ல் இலங்கை பிரித்தானியரிடம் இருந்து விடுதலை பெற்ற காலத்தில் இருந்து, தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. அரசியல் உரிமைக்கான அமைதிவழிப் போராட்டங்கள் 1983க்குப் பின்னர் உள்நாட்டுப் போராக மாறியதால், இலங்கைத் தமிழர் பலர் இலங்கையை விட்டு வெளியேறி, இந்தியா அமெரிக்கா, கனடா, ஆசுத்திரேலியா ஆகிய நாடுகளிலும், பல ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். ஏறத்தாழ இலங்கைத் தமிழரில் மூன்றிலொரு பங்கினர் இலங்கையை விட்டு வெளியேறிப் பிற நாடுகளில் வாழ்கின்றனர். 800,000க்கு மேற்பட்ட எண்ணிக்கையினர் இவ்வாறு வெளிநாடுகளில் வாழ்வதாகச் சில கணிப்புகள் தெரிவிக்கின்றன. தவிர உள்நாட்டுப் போரில் இருநூறாயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர் உயிரிழந்தும் உள்ளனர். 2009 ஆம் ஆண்டின் இறுதிக்கட்டப் போர் இலங்கைத் தமிழரின் பாரிய உயிரிழப்புகளுக்கும் உடமை இழப்புகளுக்கும் மத்தியில் இலங்கை அரசாங்கத்துக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்துப் போரை நிறுத்திய போதிலும், இலங்கைத் தமிழரின் அடிப்படைப் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமலே உள்ளன.News-GIF-maveetar2015

ஈழ இயக்கங்கள் என்பன ஈழ போராட்ட வரலாற்றில் பல நிலைகளில் பல் வேறு காலகட்டங்களில் இயங்கி வந்ததும் வருகின்றதுமான இயக்கங்கள் ஆகும். அவ்வியக்கங்களின் பெயர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

 • தமிழீழ விடுதலைப் புலிகள் (Liberation Tigers of Tamil Eelam (LTTE))
 • ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) (Eelam People Democratic Party (EPDP))[1]
 • தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் (Tamileela Makkal Viduthalai Pulikal (TMVP)) [2]
 • ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி
 • (Eelam People’s Revolutionary Liberation Front (EPRLF)) [3]
 • தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(People’s Liberation Organization of Tamil Eelam (PLOT))[4]
 • தமிழீழ விடுதலை இயக்கம்
 • (Tamil Eelam Liberation Organization (TELO)) [5]
 • தமிழர் விடுதலைக் கூட்டனி (அரசியல் கட்சி) (Tamil United Liberation Front)[6]
 • ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (Eelam Revolutionary Organization of Students (EROS)
 • News-GIF-maveetar2015

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*