Seine-Saint-Denis (93) பொலிசாருக்கும் தீவிரவாதிகளுக்குமிடையில் கடும் சண்டை.

2015-11-18T064842Z_446563178_LR2EBBI0IWWPZ_RTRMADP_3_FRANCE-SHOOTING_0

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மிகக்கொடூரமான தாக்குதலில் பரிஸில் 129 இறந்தனர் 350 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து பொலிசார் தீவிரவாதிகளை தேடும்பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று  Seine-Saint-Denis (93) பகுதியில் காலை 04.30 மணியளவில் தொடங்கிய தேடுதலின் போது தீவிரவாதிகளுக்கும் பொலிசாருக்குமிடையில் மிகக்கடுமையான சண்டை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இது வரையில் ஒரு பெண் உட்பட இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பல பொலிசார் காயமடைந்துள்ளனர்; தேடுதல் பணி தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

மேலும் இன்னும் மூன்று பேர் உள்ளே இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

இதனால் அதனை சுற்றி உள்ள போக்குவரத்துகள் மெத்ரோ> திறாம்> பேரூந்துகள் அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது. அதனை சுற்றி உள்ள வட்டாரத்தில் பாடசாலைகள்அனைத்தும் இன்று மூடப்பட்டுள்ளது.

தாக்குதல்களும் தேடுதல்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.648x415_assaut-cours-saint-denis-18-novembre-2015Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*