புலிகளின் தலைவர்களுக்கு அமைச்சுப் பதவி / புலிச் சந்தேகநபர்களை ஏன் விடுதலை செய்யவில்லை – அமைச்சர் அர்ஜுன ரணதுங்க

தமிழ்  அரசியல் கைதிகளின் நிலைப்பாடு நாளுக்கு நாள் மாறிவருகின்ற நிலையில் சில தமிழ் அரசியல் கைதிகள் சிறுநீரகம்new-Gif1 செயலிழக்கும் தருணம் வந்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன  அவ்வாறு  இருக்க விடுதலை தொடர்பாக சிங்கள அமைச்சர் ஒருவர் தெரிவித்த கருத்து

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி அவர்களுடன் ஒன்றாக அமைச்சரவையில் அங்கம் வகித்த கடந்த அரசாங்கத்தின் உறுப்பினர்கள் புலிச் சந்தேகநபர்களை சட்டரீதியாக விடுதலை செய்வதற்கு எதிராக செயற்படுவதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக கொழும்பின் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேகநபர்கள் சட்டரீதியாக விடுதலை செய்வதனை எதிர்க்க பல அரசியல்வாதிகளுக்கு எவ்வித தகுதியும் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.News-GIF-maveetar2015

நாட்டின் சட்டம் நீதிமன்றின் ஊடாக அமுல்படுத்தப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக கூறப்படும் சந்தேகநபர்கள் விடுதலையாவதனை சில அரசியல்வாதிகள் விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான அரசியல்வாதிகளே நாட்டில் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஊழலில் ஈடுபட்டு மீண்டும் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அவர்கள் இனவாதக் கருத்துகளை வெளியிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*