கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆராய அலரி மாளிகையில் இன்று விசேட கூட்டம்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் new-Gif1கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆராய ஜனாதிபதி, பிரதமர்,சட்டமா அதிபர், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலைமையில் விசேட கூட்டம் இன்று அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, சிறைச்லைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உட்பட உயர்மட்டப் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.News-GIF-maveetar2015

தம்மை விடுதலைசெய்யுமாறு வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள், கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தனர். தம்மை பொதுமன்னிப்பில் விடுதலை செய்யுமாறும் அவ்வாறு இல்லையேல் புனர்வாழ்வளித்தாவது விடுவிக்குமாறும் அந்தக் கடிதத்தினூடாக அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். தமிழ் அரசியல் கைதிகளின் இந்தக் கோரிக்கை தொடர்பில் சட்டமா அதிபருடன் ஜனாதிபதி பேச்சு நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே இன்றைய விசேட கூட்டம் இடம்பெறவுள்ளது.Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*