இன்று ஒன்பதாவது நாளாகவும் சிறைச்சாலைகளில் தொடர்கிறது உண்ணாவிரதப் போராட்டம்

பொதுமன்னிப்பு வழங்கித் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி தமிழ் new-Gif1அரசியல் கைதிகள் முன்னெடுத்துவரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று ஒன்பதாவது நாளாகவும் சிறைச்சாலைகளில் தொடர்கிறது. போராட்டத்தில் குதித்துள்ளவர்களின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, கவலைக்குரியதாக இருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.

உடல்நிலை மோசமடைந்துள்ள கைதிகளுள் மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மூவரின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது என்றும் அவர் கூறினார். எனவே, அவர்களுக்கு சிகிச்சை வழங்கி, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கையை முன்னெடுக்குமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தான் நேற்று அவசர கடிதம் அனுப்பிவைத்துள்ளார் என்றும் சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.News-GIF-maveetar2015

இந்த விடயத்தை சிறைச்சாலைகள் அமைச்சர், சிறைச்சாலைகள் ஆணையாளர் ஆகியோரின் கவனத்துக்குத் தான் கொண்டு வந்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்துக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது என்றும் சுமந்திரன் எம்.பி. மேலும் தெரிவித்தார்.Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*