யாழில் முதற்தடவையாக சிறுவர் நாடாளுமன்றத் தேர்தல்

யாழ். மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கான சிறுவர் நாடாளுமன்ற தேர்தல் new-Gif1முதன் முறையாக இன்று  நடைபெற்றது.
யாழ். இந்து மகளிர் கல்லூரியில் இன்று காலை 10.00 மணியளவில் வாக்களிப்புக்கள் ஆரம்பமாகி இடம்பெற்றன. யாழ். வலய கல்வி பணிமனையின் ஏற்பாட்டில், யாழ். இந்து மகளிர் பாடசாலை அதிபர் பிரதான தெரிவத்தாட்சி அலுவலராக கடமையாற்றி இத்தேர்தலை நடாத்தினார்.
இந்த தேர்தலில் 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். அதில் 10 அமைச்சுக்களும், 10 பிரதி அமைச்சுக்களும் தெரிவு செய்யப்படவுள்ளன.4 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, தரம் 6 முதல் 13 ஆம் தரம் வரையான மாணவர்கள் வாக்களிப்பினை மேற்கொண்டு வருகின்றார்கள்.News-GIF-maveetar2015
மாணவர்கள் தமது கருத்துக்களை சுயமாகவும், சுதந்திரமாகவும் வெளியிட்டு தமது பிரச்சினைகளுக்கு தாமே தீர்வு காணும் முகமாக சிறுவர் பாராளுமன்ற தேர்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 19 ஆம் திகதி வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டு, இன்று சிறுவர் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*