தென்னாபிரிக்க மாநாட்டில் பொறுப்புக்கூறலும் பரிகாரநீதியுமே முதன்மையாக வலியுறுத்தப்பட்டது : துணை அமைச்சர் சியான் சின்னராசா

தென்னாபிரிக்காவின் டுர்பண் நகரில் இடம்பெற்றிருந்த சிறிலங்காவின் அமைதிக்கும் new-Gif1சமாதானத்துக்குமான மாநாட்டில் ஈழத்தமிழினத்தின்; மீது இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலும் பரிகாரநீதியுமே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரதானமாக வலியுறுத்தியிருந்ததாக துணை அமைச்சர் சியான் சின்னராசா அவர்கள் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 6 7 ஆகிய நாட்கள் இடம்பெற்றிருந்த இந்த மாநாட்டினை தென்னாபிரக்க அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் Solidarity Group for Peace and Justice in Sri Lanka (SGPJ)  அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
15க்கும் மேற்பட்ட தமிழர் அமைப்புகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் தமிழீழத் தாயகம், புலம், தமிழகம் ஆகிய இடங்களில் இருந்து பங்கெடுத்திருந்தன.
இதில் பங்கெடுத்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளில் ஒருவரான ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்களுக்கான துணை அமைச்சர் சியான் சின்னராசா அவர்கள் கருத்து தெரிவிக்கையில் :

இலங்கைத்தீவின் இனநெருக்கடி விவகாரத்தில் தென்னாபிரிக்கா அரசாங்கம் சில முன்னெப்புக்களை மேற்கொண்டு வருகின்றது.News-GIF-maveetar2015
இந்நிலையில் தமிழர் தரப்பின் கருத்துக்களையும் எதிர்பார்ப்புக்களையும் கவனத்தில் கொள்ளும் வகையில் இந்த மாநாடு இடம்பெற்றிருந்தது.
தொடர்ச்சியான உரையாடல்களுக்கான ஓர் தொடக்க புள்ளியாக இடம்பெற்றிருந்த இந்த மாநாட்டில் அரசியற் தீர்வுத்திட்டம் குறித்து உரையாடிக் கொள்ளவில்லை.
பல்வேறு தரப்பினராலும் இனநல்லிணக்கம் குறித்த செயன்முறைக்கு முன்னராக, ஈழத்தமிழினத்தின் மீது இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலும் பரிகாரநீதியுமே வலியுறுத்தப்பட்டது.
மேலும், சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்ற அடிப்படையில் ஈழத்தமிழ் மக்களது விவகாரம் நோக்கப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.
அரசியற் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம், இராணுவ வெளியேற்றம், ஆறவாது திருத்தச்சட்ட நீக்கம் உட்பட இரு நாள் அமர்வின் நிறைவில் ஏழு விடயங்கள் பரிந்துரைகளை கொண்ட தீர்மானமாம் நிறைவேற்றப்பட்டது.
நாதம் ஊடகசேவைGif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*