ஷானு நிதியத்தின் நிதியுதவியுடன் மட்/மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயத்தில் சிறுவர்களுக்கான விழிப்புணர்வு.

06.11.2015 இன்று காலை மு.ப 9.00 மணியளவில் ஷானு நிதியத்தின் நிதியுதவியுடன் மட்/மஞ்சந்தொடுவாய் பாரதிnew-Gif1 வித்தியாலயத்தில் சிறுவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வும் அதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்கள் ஒன்றினைந்து சமூகத்தை விழிப்புணர்வுட்டும் பேரணியும் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.மு.பாஸ்கரன் மட்டக்களப்பு மாவட்ட கல்விப்பணிப்பாளர்.சிறப்பு விருந்தினராக திரு.யு.சுகுமாரன் கோட்டக்கல்விப் பணிப்பாளர் மண்முணை வடக்கு .திரு.உ.உதயச்சந்திரன் ஷானு நிதியத்தின் பணிப்பாளர்.கெளரவ விருந்தினராக திரு.சோஅருளானந்தம் ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் பொலிஸ் பொறுப்பதிகாரிகள்  காத்தான் குடி பொலிஸ் பிரிவு ஆகியோரும் மத குருக்களான அருட் திரு.G.குணாளன் மெதடிஸ்  திருச்சபை நாவற்குடா  சிவஸ்ரீ ந.குகநாதசர்மா ஸ்ரீசித்தி விநாயகர் ஆலய பிரதம குரு ஆகியோரின்ஆசியுடனும் சொற்பொழிவுடனும் மாணவர்களின் விழிப்புணர்வு நாடகம்.நடனம் ஆகியவற்றோடு வளவாளர்களான  S.ஸ்ரீதரன் ஆலோசனையும் வழிகாட்டலும் ஆசிரிய ஆலோசகர் மண்முணை வடக்கு,   S.பற்றிக்  Y.M.CA மட்டக்களப்பு   இவர்களினால் சிறுவர்களுக்கம் பெற்றோர்களுக்கும் மற்றும் பாடசாலை சமூகத்தினருக்கும் சிறுவர் துஸ்பிரயோகம் வன்முறை மற்றும் பாலியல் ரீதியான துஸ்பிரயோகங்கள் தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கை நடாத்தினார்கள்.News-GIF-maveetar2015

இதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்கள் சமூகத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக பேரணியாக நடந்து சென்றார்கள். இப்பேரணியின் போது சிறுவர்கள் தங்கள் கரங்களிலே தங்களது உரிமைகள் தொடர்பான வாசகங்கள் அடங்கிய பாதாதைகளை ஏந்திய வண்ணம் பாடசாலையிலிருந்து பிரதான வீதிக்கு சென்றடைந்து காத்தான் குடி போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் உதவியுடன்  வீதியால் சென்ற வாகனங்களுக்கு மாணவர்கள் ஆசிரியர்கள் அதிபர்கள் ஷானு நிதியத்தின் சேவையாளர்கள் மூலமாக விழிப்புணர்வூடும் ஒட்டுப்பிரதிகள்  ஒட்டப்பட்டன.

இந்நிகழ்வானது காலை 09.00 மணியிலிருந்து பிற்பகல் 01.30 வரை இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் மட்/மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயம். மட்/சாரதா வித்தியாலயம் மஞ்சந்தொடுவாய். மட்/தர்மரத்தினம் வித்தியாலயம் நாவற்குடா.ஆகிய பாடசாலைகளின் அதிபர் .ஆசிரியர்கள் மாணவர்கள் சகிதம் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. 01 (1) 01 (3) 01 (6) 01 (7) 01 (9) 01 (10) 01 (13) 01 (14) 01 (16) 01 (18) 01 (19) 01 (20) 01 (22) 01 (24) 01 (25) 01 (26) 28 32

Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*