பொப்பி மலருடன் நாடாளுமன்றில் சுமந்திரன்!

இராணுவ வீரர்களை கௌரவித்து நினைவுகூரும் பொப்பி மலரைnew-Gif1 தன் கோர்ட்டில் குத்தியவாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் காணப்பட்டார்.

இராணுவ வீரர்களை கௌரவித்து நினைவுகூரும் தினம் நேற்று பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது. இதில் முன்னாள் தளபதிகள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பங்கு கொள்வோர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் இராணுவ வீரர்களை கௌரவிக்கும் வகையிலான பொப்பி மலரை தமது உடைகளில் குத்தியிருந்தனர்.News-GIF-maveetar2015

சபைக்குள் வந்த பிரதமர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் பொப்பி மலரை தமது ஆடைகளில் குத்தியவாறு காணப்பட்டனர். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஏனைய உறுப்பினர்கள் பொப்பி மலரை குத்தியிருக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பொப்பி மலரை குத்தியிருக்கவில்லை.Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*