கிரேக்கத்தின் Fourni பகுதியில் 22க்கும் அதிகமான கப்பல் விபத்துக்கள்.

கிரீஸ் மற்றும் அமெரிக்க நாட்டின் தொல்லியலாளர்கள் குழு ஒன்று நடத்திய ஆராட்சியில் கிரேக்கத்தின் Fourni பகுதியில் 22க்கும் அதிகமான new-Gif1கப்பல் விபத்துக்கள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தொல்லியல் ஆராட்சியாளர்கள் கண்டு பிடித்துள்ள இப்பகுதி கிரேக்கத்தில் இருந்து சைப்ரஸ் மற்றும் எகிப்து நாடுகளுக்கு கப்பல் சேவை நடைபெற்ற பகுதியெனவும்,

இந்த கப்பல் விபத்துகள் 700BC தொடங்கி 16-ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில் நடைபெற்ற தீவிர ஆராட்சியின் முடிவில் சுமார் 40 கப்பல் விபத்துகள் நடந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Fourni பகுதியின் 17 மைல் தொலைவுக்குள் இந்த கண்டுபிடிப்பை தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இப்பகுதி முழுவது புதையல்கள் குவியலாக கிடப்பதாக தெரிவித்துள்ள ஆராட்சியாளர்கள், அதை மீட்டு பத்திரப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Samos மற்றும் Ikaria தீவுகளுக்கிடயே கிரீஸின் Fourni பகுதி அமைந்திருப்பதால்தான் அப்பகுதியில் அதிக கப்பல் விபத்துகள் நேர்ந்துள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆராட்சியில் அப்பகுதியில் உள்ள மீனவர்கள் மற்றும் டைவர்ஸ் பெருமளவு உதவியுள்ளதாக தொல்லியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.furni 01 furni 02 furni 03Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*