ஜேர்மனியில் அகதி சிறுவன் ஒருவனை பாலியல் பலாத்காரம் செய்து கொலை!!!

ஜேர்மனியில் அகதி சிறுவன் ஒருவனை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளியை பொலிசார் கைது செய்துள்ளனர்new-Gif1

ஜேர்மனியின் பெர்லின் நகரில் உள்ள அகதிகள் பதிவு மையத்தில் தனது பெற்றோருடன் இருந்த மொஹமத் ஜனுஷி என்ற 4 வயது சிறுவன் திடீரென காணாமல் போனான்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர். கடைசியாக மொஹமத் கடந்த ஒக்டோபர் 1ஆம் திகதி ஒரு நபருடன் சாலையில் சென்றது அங்கிருந்த கமெராவில் பதிவாகியிருந்தது.

இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்திய பொலிசார் சில்வியொ என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியதில் பாலியல் வல்லுறவில் ஈடுபடவே மொஹமத்தை கடத்தியதாகவும்.

அடுத்த நாள் அவன் அதிகமாக கூச்சல் போட்டதால் அவனை கொலை செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். கொலை செய்யப்பட்ட மொஹமத்தின் உடல் சில்வியோவின் காரில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த யூலை மாதம் காணாமல் போன எலியாஸ் என்ற சிறுவனையும் பாலியல் உறவுக்காக கடத்தி கொலை செய்ததையும் சில்வியோ ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து அதிர்ச்சியடைந்த பொலிசார் காணாமல் போன மேலும் ஒரு சிறுமியை பற்றியும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் ஜேர்மனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.germeny 01n germeny 02n germeny 03Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*