பிப்ரவரி 24–ந்தேதி 13–வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை வங்காளதேசம் நடத்துகிறது

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984–ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் இருந்து new-Gif12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தப்போட்டி நடைபெற்று வருகிறது.இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை ஆகிய 4 நாடுகள் பெரும்பாலான போட்டிகளில் பங்கேற்று விளையாடி இருந்தது.

13–வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை வங்காளதேசம் நடத்துகிறது. சிங்கப்பூரில் நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.அடுத்த ஆண்டு பிப்ரவரி 24–ந்தேதி முதல் மார்ச் 6–ந்தேதி வரை நடக்கிறது.வங்காளதேசத்தில் தொடர்ந்து 3–வது முறையாக ஆசிய கோப்பை போட்டி நடைபெறுகிறது.

2012–ம் ஆண்டும், கடந்த ஆண்டும் அங்கு தான் போட்டி நடைபெறுகிறது. ஒட்டுமொத்தமாக 5–வது தடவையாக ஆசிய கோப்பை அங்கு நடைபெறுகிறது.இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் 20 ஓவர் முறையில் நடக்கிறது. 50 ஓவர் கொண்ட ஒருநாள் போட்டியாக தான் இதற்கு முன்பு நடைபெற்று வந்தது. தற்போது முதல் முறையாக 20 ஓவர் முறையில் நடத்தப்படுகிறது.News-GIF-maveetar2015

20 ஓவர் உலககோப்பை போட்டி மார்ச் 11–ந்தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இந்தப்போட்டி முன்னதாக இது நடைபெறுவதால் ஆசிய கோப்பையை 20 ஓவராக நடத்த கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது.இந்தப்போட்டியில் 5 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய 4 நாடுகளும் நேரடியாக விளையாடும்.

ஆப்கானிஸ்தான், ஓமன், ஆங்காங், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து ஒருநாடு தகுதி பெறும். தகுதி சுற்று போட்டிகள் நவம்பர் மாதம் நடக்கிறது.இந்தியா, இலங்கை அணிகள் தலா 5 முறையும், பாகிஸ்தான் 2 தடவையும் ஆசிய கோப்பையை கைப்பற்றியுள்ளன.Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*