தாபரிப்பு பணத்தினை பெற தன் குழந்தைக்கு வேறொரு இளைஞனை தந்தையாக்கிய பெண்

தாபரிப்பு பணத்தினை பெற்றுக் கொள்வதற்காக தனக்கு பிறந்த குழந்தைக்கு வேறொரு இளைஞன் new-Gif1ஒருவனை தந்தையாக்க பெண்ணொருவர் முயன்றுள்ளார்.

ஆனால் அக்குழந்தை அவ்விளைஞனுக்கு பிறந்தது அல்ல என்று மரபணு பரிசோதனையின் ஊடாக அம்பலமாகியுள்ளது.

இந்நிலையில், தாபரிப்பு கேட்டு வழக்குத்தாக்கல் செய்த பெண், குறித்த இளைஞனுக்கு நட்டஈடு செலுத்தவேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

 தனக்குப் பிறந்த குழந்தைக்கு அவ்வூரைச் சேர்ந்த இளைஞரொருவன் தான் காரணம் என்றும், குழந்தையை வளர்ப்பதற்கு தாபரிப்பு பணம் வழங்கவேண்டுமெனக்கோரி, பெண் ஒருவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு கடந்த 11 மாதங்களாக சாவகச்சேரி நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு  நடைபெற்று வந்ததுடன்  28 ஆம் திகதி புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.News-GIF-maveetar2015

அந்தக் குழந்தைக்கு தான் காரணமில்லையெனத் தெரிவித்த இளைஞன், மரபணு பரிசோதனையின் மூலம் அதனைத் தான் நிரூபிப்பதாகவும்,  அதற்கான செலவை தானே ஏற்பதாகவும் , தனது சட்டத்தரணியூடாக நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.
அதனை ஏற்ற நீதவான், மரபணு பரிசோதனைக்கும் உத்தரவிட்டார்.

 மரபணுப் பரிசோதனையில் மேற்படி இளைஞன் குறித்த குழந்தைக்கு தந்தை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, மேற்படி இளைஞனை விடுதலை செய்த நீதவான், இவ்வாறான பொய் வழக்கை இனிவரும் காலங்களில் தாக்கல் செய்தால்  விளக்கமறியலில் வைக்கப்படுவீர் என,  அப்பெண்ணை கடுமையாக எச்சரிக்கை செய்தார்.

அத்துடன், மரபணு பரிசோதனைக்காக இளைஞன் செலவு செய்த 9,750 ரூபாய், வழக்குச் செலவு  5,000 ரூபாய் ஆகியவற்றை,  இளைஞனுக்குச் செலுத்துமாறு அப்பெண்ணுக்கு நீதவான் உத்தரவிட்டார்.

இச்சம்பவம் யாழில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*