தமிழ்க் கைதிகளை விடுவித்தால் புலிகள் இயக்கம் மீளவும் உதயமாகும்:குணதாச அமரசேகர

சிறை­களில் இருக்கும் புலி­களை விடு­வித்து நாட்டில் மீண்டும் new-Gif1குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. இவர்­களை விடு­தலை செய்தால் புலி­க­ளுக்கு அர­சாங்­கமே அங்­கீ­காரம் கொடுப்­ப­தற்கு சம­மா­னது என தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் தெரி­வித்­துள்­ளது. இவர்­களை விடு­வித்தால் மீண்டும் ஐந்தாம் ஈழப்போர் ஆரம்­ப­மாகும் எனவும் அவ் இயக்கம் எச்­ச­ரித்­தது.

நீண்­ட­கா­ல­மாக தடுப்­புக்­கா­வலில் உள்ள தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விப்­பது தொடர்பில் அர­சாங்கம் இணக்கம் தெரி­வித்­துள்ள நிலையில் அது குறித்து மஹிந்த ஆத­ரவு அணியின் முக்­கிய அமைப்­பான தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்­திடம் வின­வி­ய­போதே அவ் அமைப்பின் தலைவர் குண­தாச அம­ர­சே­கர மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

விடு­தலைப் புலிகள் இயக்­கத்தை எமது நாட்டில் மட்­டு­மல்­லாது உலகில் பல நாடு­க­ளிலும் தடை செய்­யப்­பட்ட இயக்­க­மாக கரு­து­கின்­றனர். இவர்­களின் ஆயுதப் போராட்­டமும், தமி­ழீழக் கொள்­கையும் அனை­வ­ராலும் புறக்­க­ணிக்­கப்­பட்ட ஒன்­றாகும். கடந்த மூன்று தசாப்­த­கால யுத்­தத்தை மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் முடி­வுக்கு கொண்­டு­வந்தது. ஆனால் சர்­வ­தேச மட்­டத்தில் இந்த போராட்­டமும் தமி­ழீ­ழத்­துக்­கான முயற்­சி­களும் இன்னும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

அவ்­வாறு இருக்­கையில் புலி­க­ளுடன் தொடர்­பு­டைய நபர்­களை முன்­னைய அர­சாங்கம் கைது­செய்து தடுத்து வைத்­தி­ருந்­தது. அவர்கள் மூல­மாக சர்­வ­தேச மடத்தில் இயங்கும் புலி உறுப்­பி­னர்­களை அடை­யாளம் காணவும் திட்டம் இருந்­தது. ஆனால் இப்­போது இந்த நபர்­களை அர­சியல் கைதிகள் என்ற பெயரில் விடு­விக்க அர­சாங்கம் இணக்கம் தெரி­வித்­துள்­ளமை சிக்­கலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.News-GIF-maveetar2015

அதா­வது இவர்­களை விடு­வித்து நாட்டில் மீண்டும் குழப்­பத்தை ஏற்­ப­டுத்த அர­சாங்­கமே முயற்­சிக்­கின்­றது. இவர்­களை விடு­வித்தால் இவர்­களின் மூல­மாக சர்­வ­தேச பயங்­க­ர­வாத அமைப்­புகள் மீண்டும் இலங்­கையில் இயங்க ஆரம்­பிக்கும் வாய்ப்­புகள் உள்­ளன. சர்­வ­தேச மட்­டத்தில் புலிகள் பல­மாக இயங்கி வரு­கின்ற நிலையில் அவர்கள் மீண்டும் நாட்டை பிரிக்கும் வேலையை ஆரம்­பிப்­பார்கள் என்ற அச்சம் இன்றும் உள்­ளது. அர­சாங்­கத்­திற்கும் இது நன்­றா­கவே தெரியும்.

எனினும் இவை அனைத்­தையும் தடுக்கும் எண்ணம் அர­சாங்­கத்­திற்கு இல்லை. புலம்­பெயர் அமைப்­பு­களின் ஆத­ர­விலும் மேற்­கத்­தேய நாடு­களின் ஆலோ­ச­னை­யிலும் இந்த அர­சாங்கம் ஆட்­சியை கைப்­பற்­றி­யுள்­ளது. ஆகவே அவர்­க­ளுக்கு விசு­வா­ச­மான வகையில் அர­சாங்கம் இங்கு செயற்­பட்டு வரு­கின்­றது. இப்­போதும் புலி­களை விடு­விப்­ப­தாக குறிப்­பிட்­டி­ருப்­பதும் சர்­வ­தே­சத்தின் அழுத்தம் கார­ண­மா­கவே தவிர வேறு எந்­த­வொரு கார­ணமும் இல்லை.

இப்­போது அர­சாங்­கமே புலி­களை விடுதலை செய்தால் இவர்கள் புலிகளை ஆதரிப்பதாக அமைந்துவிடும். அதேபோல் இப்போது இலங்கையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஈழத்திற்கான போராட்டம் மீண்டும் ஐந்தாம் ஈழப்போராக உருவெடுக்கும் என்பதை அரசாங்கம் நினைவில் வைத்து செயற்பட வேண்டும்” என்றார்.Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*