லண்டன் வந்த சீன அதிபருக்கு தமிழர்கள் எதிர்ப்பு காட்ட தவறிவிட்டார்கள் எமக்ககாக!

தற்போது லண்டன் வந்துள்ள சீன ஜனாதிபதிக்கு தமிழர்கள் எவரும் தமது எதிர்ப்பை காண்பிக்கவில்லை என new-Gif1செயல்பாட்டாளர்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள்.

சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் இன்று லண்டன் வந்தடைந்தார். அவருக்கு எந்த ஒரு ஜனாதிபதிக்கும் கொடுக்காத மகத்தான வரவேற்ப்பை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கொடுத்துள்ளார்.

பிரித்தானிய மகாராணி எலிசபெத் அவர்களை சந்தித்த சீன அதிபர் , அவருடன் குதிரை வண்டியில் பயணித்து பக்கிங்ஹாம் மாளிகை செல்ல. அங்கே 21 குண்டுகள் முழங்க அவருக்கு மாபெரும் மரியாதை கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோக முழு ராஜகுடும்பமும் அவருக்கு மரியாதை செய்துள்ளது. News-GIF-maveetar2015

திபெத் என்னும் நாட்டை சீனா கைப்பற்றியது யாவரும் அறிந்த விடையம். லண்டனில் வாழும் திபெத்தியர்கள் , தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். அதுபோக சர்வதேச மன்னிப்புச் சபையும் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் முள்ளிவாய்க்காலில் , யுத்தம் கடுமையாக நடைபெற்றவேளை , பிரித்தானிய அரசு ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது. அதில் உடனடியாக போர் நிறுத்தம் ஒன்று வரவேண்டும் என்று கோரப்பட்டது. ஆனால் அத்தீர்மானத்தை சீனா அரசு , தனது வீட்டோ அதிகாரத்தை பாவித்து ரத்துச் செய்து மகிந்தருக்கு பெரும் உதவி புரிந்தது.

சீன அரசு தமிழர்களுக்கு வரலாற்று துரோகத்தை இழைத்தது. முள்ளிவாய்க்காலில் 40,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மடிய சீனாவும் உதவியது என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும். அதுபோக சீன அரசு இலங்கைக்கு ஆயுதங்களை கடன் அடிப்படையில் அள்ளி வழங்கியதும் அனைவரும் அறிந்த விடையம். அந்த வகையில் லண்டனில் உள்ள தமிழர்கள் தமது குறைந்த பட்ச எதிர்ப்பையாவது வெளிப்படுத்தி இருக்கவேண்டும் என்று பலர் விசனம் வெளியிட்டுள்ளார்கள்Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*