போர்க்குற்றங்களில் அரசபடையினர் ஈடுபட்டனர்! – ஒப்புக்கொள்கிறது பரணகம ஆணைக்குழு

அரச படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக முன்னாள்new-Gif1 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்ட மெக்ஸ்வல் பரணகம ஆணைக்குழுவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. போர்க்குற்றங்களில் ஈடுபட்டமைக்காக சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டுமென பரணகம ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

2013ம் ஆண்டு மெக்ஸ்வல் பரணகம ஆணைக்குழு நிறுவப்பட்டிருந்தது. இந்த ஆணைக்குழுவின் அறிக்கை அரச தரப்பின் குற்றச் செயல்களை மூடி மறைத்து வெள்ளையடிக்கும் என்றே பலர் கருதியிருந்தார்கள். எனினும், அதிர்ச்சியளிக்கும் வகையில் அரச படையினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.

காணாமல் போனவர்கள் தொடர்பிலும் யுத்தம் இடம்பெற்ற கால மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான மீறல்கள் தொடர்பிலும் இந்த ஆணைக்குழு விசாரணை நடத்தியிருந்தது. பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த ஆகஸ்ட் மாதமே பூர்த்தியாகியுள்ளது.

சனல் 4 ஊடகத்தின் நோ பயர் ஸோன் ஆவணப்படம் உண்மையானது எனவும் ஆவணப்படத்தின் குற்றச்சாட்டுக்கள் குறித்து நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பில் இராணுவ விசாரணைகள் நம்பகமானதாக அமையாது எனவும் சர்வதேச ரீதியிலான கண்காணிப்புடன் கூடிய நிதிமன்ற விசாரணைகளின் ஊடாகவே உண்மையை வெளிக்கொணர முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

178 பக்கங்களைக் கொண்டுள்ளஇந்த அறிக்கையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்திற்கு அப்பால் சென்று, பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. யுத்தக் குற்றச்செயல் குறித்த உள்ளக விசாரணைப் பொறிமுறைமையில் சர்வதேச பங்களிப்பு இருக்கலாம் என்றே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.News-GIF-maveetar2015

ஆனால் இலங்கையின் நீதிமன்றக் கட்டமைப்பில் யுத்தக் குற்றச் செயல்கள் தொடாபில் தனியான ஓர் பிரிவு உருவாக்கப்பட வேண்டுமென பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மற்றும் உள்நாட்டு அரசியல் சாசனத்திற்கு அமைவாக விசாரணைகளை நடத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைப் பொறிமுறைமையில் சர்வதேச நீதவான்களின் பங்களிப்பு அவசியமானது எனவும் இந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது. விசாரணைகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய சர்வதேச நீதவான்களின் பங்களிப்பு அவசியமானது என பரணகம ஆணைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க உள்ளக நீதவான்கள் விசாரணைப் பொறிமுறைமையில் ஈடுபடுத்தப்பட்டால் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களையேனும் உள்வாங்க வேண்டும். நாட்டில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களை அரசாங்கம் பகிரங்மாக ஏற்றுக்கொண்டு உண்மையைக் கண்டறியும் பொறிமுறைமை ஒன்று நிறுவப்பட வேண்டும். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிப்பு வழங்கியோ அல்லது தண்டனை விதித்தோ குற்றச் செயல்கள் ஒப்புக்கொள்ளப்பட வேண்டுமெனவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*