ஜெனிவாவும் மாறுபடும் அரசியலும் – ஜெனிவா அரோகரா ச. வி. கிருபாகரன .

ஐக்கிய நாடுகள் மனித உரிமை செயற்பாடுகளில் ஈழத்தமிழர் கடந்த 1987ம் ஆண்டு முதல் பங்களித்து வருகின்றனர். இவ்new-Gif1 செயற்பாடுகளின் முதன் முதலில் – சுவிஸ்லாந்தை சார்ந்த திரு தம்பிப்பிள்ளை நமசிவயம், திரு கிருஸ்ண அம்பலவாணர், பிரித்தானியவை சார்ந்த திரு நா.  சீவரத்தினம் ஆகியோரே கலந்து கொண்டனர். இவர்களில் திரு தம்பிப்பிள்ளை நமசிவாயம் அவர்கள், தனது அரசியல் வேலை பழுக்களுக்களின் மத்தியிலும், தற்பொழுதும் இடை இடையே பங்கு கொண்டு வருகிறர்.

இதனை தொடர்ந்து பெரியவர்களினால் தேர்ந்து ஏடுக்கப்பட்டு, 1990ம் ஆண்டு முதல், ஐ. நா. மனித உரிமை செயற்பாடுகளில், சிறிலங்கா அரசின் மிரட்டல்களின் மத்தியில் இன்றும் தொடர்ந்து வெற்றிகரமாக பங்கேற்று வருகிறேன். சில தமிழர்களின் காப்புணர்ச்சி பொறமை இவற்றிற்கு விதிவிலக்கல்லா. முன்பு என்னுடன் ஐ.நா.வில் செயற்பட்ட தமிழர்கள் யாரும் தற்பொழுது செயற்படுவதில்லை.,

சிலர் தமது ஐ. நா. செயற்பாட்டின் காலங்களை சிறுபிள்ளைகள் போல், சுயநலம் கருதி மிகைபடுத்துகிறார்கள்! இப்படியாக பொய்யும் புரட்டு கூறுபவர்கள், மற்றவர்களது மனங்களை கவர்வதற்காக வேறு என்ன விடயங்களை மிகைப்படுத்துகிறார்கள் என்ற சந்தேகம் இன்று பரவலாக எழுந்துள்ளது. இவர்கள் முக்கிய விடயம் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். அதாவது, ஐ.நா.வில் மட்டுமல்லாது, ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதுரகத்தில், ஈழத்தமிழர் யார் யார் என்று தொட்டு ஐ. நா. செயற்பாடுகளில் கலந்து கொள்ளுகிறார்கள் என்பது பற்றிய விபரங்களும், புகைபடங்களுடன் ஆவணமாக உள்ளது.

அன்றிலிருந்து இன்றுவரை ஐ. நா. மனித உரிமை செயற்பாடுகளில் ஈழத்தமிழர் விவகாரத்தை நாம் ஆராயுமிடத்து பல உண்மைகள் தெளிவாகிறது.

2009ம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுறும் வரை, எந்தவொரு தமிழ் பாரளுமன்ற உறுப்பினரும் ஜெனிவா ஐ. நா. மனித உரிமை செயற்பாடுகளில் கலந்து கொண்டது கிடையாது. ஆனால் ஐ.நா.விற்கு வெளியில், அமைக்கப்பட்ட மேடையில், திரு சிவஜிலிங்கம் உரையாற்யிருந்தார் என்பது உண்மை.

தமிழர் மனிதர் உரிமை மையத்தின் அனுசாரணையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பல முக்கிய பாரளுமன்ற உறுப்பினர்கள, முன்பு ஐரோப்பிய பாரளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்புக்களை நடத்தியிருந்தார்கள். தற்பொழுது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாரளுமன்ற உறுப்பினர்கள் ஐ. நா. மனித உரிமை சபை கூட்டங்களில் கலந்து கொள்வது மிகவும் நல்ல விடயம். காரணம், மக்கள் பிரதிநிதிகளையே ஜெனிவாவில் உள்ள ராஜதந்திரிகளும், முக்கிய பிரதிநிதிகளும் உத்தியோகபூர்வமாக சந்திக்க விரும்புகிறார்கள்.

 

அமைச்சர்களுடன் விவாதம்

முன்பு ஐ.நா.வில் ஈழ தமிழர்களின் பரப்புரை என்றால், சிறிலங்கா அரசு கெடிகலங்கிய காலம் என்று ஒன்று இருந்தது. ஆரம்பத்தில், பிரித்தானியாவிலிருந்து திரு நடேசன் சந்தியேந்திரா, அமெரிக்காவிலிருந்து திரு வீக்லி போல் போன்ற பிரபல சட்டத்தரணிகள் கலந்து கொண்டனர். பின்னர் மாமனிதர் குமார் பொன்னம்பலம், பேராசிரியர் ஜோன் நீல்சன் போன்றோரும் கலந்து கொண்டனர்.

யுத்தம் கடுமையாக நடந்த வேளையில், 2007ம் ஆண்டு யூன் மாதம், ஜனதிபதி ராஜபக்சாவுடன் பல அமைச்சர்கள் ஜெனிவா வந்திருந்த வேளையில், இவர்கள் மனித உரிமை சபையில் ஓர் கூட்டத்தை நடத்தினார்கள். அவ் வேளையில், நான் தனித்து நின்று சிறிலங்காவின் அமைச்சர்களான அத்துடா செனிவரட்னா, கெகலியா ராம்புகலை, மகிந்த சமரசிங்கா, டக்ளஸ் தேவனாந்த, ஜனதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கா, சட்ட மா அதிபர் சி. ஆர். டீ. சில்வா, தூதுவர் டயான் ஜயதிலக்கா ஆகியோருடன் விவாதம் நடத்தியதை அன்று ஐ.நா.வில் பிரசன்னமாகியிருந்த பல இனத்தவர்களும் கண்டு மெச்சினார்கள். இவர்களில் பலர் இன்றும் ஐ.நா.வில் இவ் சம்பவத்தின் சாட்சிகளாக உள்ளனர். இக் கூட்டத்தில் வண பிதா இம்மானுவேலும் பிரசன்னமாகியிருந்தார்.

இதே வருடம், செப்டம்பர் மாதம் அன்றைய சிறிலங்காவின் வெளிநாட்டு அமைச்சாரான ஜி. ஏல். பீரிஸ் ஐ.நா.வில் உரையாற்றிய கூட்டமொன்றில, மீண்டும் தனித்து நின்று, அவருடன் வெற்றிகரமாக நடத்திய விவாதங்களின் சட்சியங்கள் இன்றும் ஐ.நா.வில் உள்ளன. இவ்விரு கூட்டம் பற்றிய விபரங்கள் யாவும், கொழும்பு சிங்கள, தமிழ், ஆங்கில பத்திரிகைகளில் வெளியாகியிருந்ததை தொடர்ந்து, வன்னியிலிருந்து பாராட்டுகள் வந்து குவிந்தனா.

இவ்விரு கூட்டங்கள் பற்றிய நிகழ்ச்சி நிரல்களை, அன்று ஜெனிவா கூட்டத் தொடரில் வெளிநாட்டு புலனாய்வாளர்களை திருப்திப்படுத்து முகமாக கபடமான வேலைகனை மேற்கொண்டிருந்த சில தமிழர்களுக்கு முன்கூட்டியே அறிவித்திருந்தும், அவர்கள் யாரும் அங்கு சமூகமளித்திருக்கவில்லை.

இப்படியாக நாளாந்தம் எமது கடுமையான செயல் திட்டம் காரணமாக, அன்றைய சிறிலங்காவின் ஐ.நா.பிரதிநிதிகள் என்னையும், நான் சார்ந்த அமைப்பினரையும் ஐ.நா.விற்குள் வரவிடது தடுப்பதற்கு பல உபாயங்களை கையாண்டார்கள். ஆனால் அவை யாவற்றையும் முறியடித்து, எமக்கு பெரியவர்களினால் கொடுக்கப்பட்ட வேலை திட்டங்களை இன்றும் சலுகைகள் சன்மானங்களை எதிர்பார்க்காது, எம்முடன் அரசியல் ரீதியாக ஒத்துபோகும் சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட்டு வருகிறோம்.News-GIF-maveetar2015

இன்று, ஐ.நா. செயற்பாடு பற்றிய அறிவு அறவே இல்லாதோரினால், ஈழதமிழர்களின் ஐ. நா. மனித உரிமை செயற்பாடுகள், ஓர் பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டிபோல் நடைபெறுகிறது. அதிலும் வெட்ககெடான விடயம் என்னவெனில், சமய தலங்களிற்கு நேத்திக்கடன் வைத்து யாத்திரை செல்வது போல், தற்பொழுது ஜெனிவா யாத்திரை நடைபெறுகிறது. சமய யாத்திரைக்கும், ஜெனிவா யாத்திரைக்கும் இடையில் சில ஒற்றுமைகளும் வேறுபாடுகளும் உள்ளன.

ஜெனிவா யாத்திரை

சமய யாத்திரை செய்பவர்கள் கடவுளை காணவிடிலும் சமய ஆவணங்களில் கூறியதற்கமைய, சமயக் கடன்களை செய்கிறார்கள். ஆனால் ஜெனிவா யாத்திரை செய்வோரில் பெரும்பான்மையானோர், அங்கு நடப்பதுது என்ன என அறவே தெரியாது, அறியாது ஐ.நா.வில் அர்த்தமின்றி வலம் வருகிறார்கள்.

இவற்றில் ஒற்றுமை என்னவெனில், சமய யாத்திரை செய்வோர் ஆலயங்களில் சமஸ்கிருதத்தில் நடைபெறும் பூசைகளை விளங்கி கொள்ளாதவர்கள்.  அதேபோல், ஐ.நா.விற்கு செல்லும் பல ஈழத்தமிழர், ஐ. நா.வில் பாவனையில் உள்ள ஆறு மொழிகளில் ஏதேனும் ஒன்றில் கூட பரீச்சாட்சம் இல்லாதவர்களாக காணப்படுகிறார்கள். வரட்டு கௌரவம் யாரை தான் விட்டு வைத்துள்ளது!

சமூக சேவையாளராகவோ அல்லது பிரமுகர்களகவோ ஆவதற்கு, சில விசேட பண்புகள் குணதிசயங்கள் அர்பணிப்புக்கள் அவசியமானவை. தகாத உறவு பழக்கவழக்கம் காரணமாக விடுதலை போராட்டத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்களும், நேர்மையற்ற கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுபவர்களும், குடும்ப வாழ்க்கையில் வன்முறையில் ஈடுபட்டு மானபங்கப்பட்டவர்களும், ஜெனிவா யாத்திரை மூலம் பிரமுகர் அந்தஸ்தை பெறமுடியாது. கங்கையில் முழ்கினாலும் காக்கை அன்னமாகாது”.

யார் குத்தி ஆனாலும் அரிசி ஆக வேண்டும் என்பதே எமது நம்பிக்கை”. ஆனால் விடுதலை போராட்டத்தை காட்டி கொடுத்தவர்களும், வெளிநாட்டில் விடுதலை போராட்டத்தின் தொண்டர்கள் மீது நடைபெறும் பயங்கரவாத முத்திரை குத்தும் வழக்குகளுக்கு பொய் சாட்சி கூறுபவர்களும், சில வேலை திட்டங்களிற்கு நிதி கொடுத்தாதற்காக, புனிதமான மேடைகளில் தோன்ற இடம் கொடுப்பது நியாயமானதா? இவர்களுக்கு அவ் நிதி எப்படி கிடைத்தது என்று நிதியை பெறுவோர் ஆராய்வதில்லையா? ஆட்கடத்தல் காரர்கள் விடுதலை போராட்திற்கு எவ்வளவு தூரம் அவமானத்தையும், ஆபாத்தையும் உண்டு பண்ண முடியும் என்பதை பொறுப்பானவர்கள் சிந்திப்பதுண்டா?

விடுதலை போராட்டம் வெற்றிகரமாக நடந்த வேளையில, தாவாரத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள், இன்று போராட்டத்தின் முதுகெலும்பு போல் நடிக்கிறார்கள். நெய்குடம் உடைந்தது நாய்க்கு வேட்டை போல், புலம் பெயர் வாழ் தமிழர்கள் பல பிரிவாக பிரிந்துள்ள நிலை, இவர்களிற்கு நன்மையாக்கியுள்ளது.

பிரமுகராகும் ண்ணம்  கொண்டு துடிப்பவர்களுக்கு, எம்மில்  சிலருடன் சர்சை என கூறுவதில் ஒர் பெருமையும்  சந்தோசமும். காரணம்,பூவுடன் சேர்ந்த வாளை நாரும் மோச்சம் போகும்; என் ம்பிக்கையே.

தமிழ் மொழியையே ஒழுங்காக வாசித்து எழுத தெரியாதவர்கள்> சில குழப்பம்காசிகளுக்கு வால் பிடிப்பதன் மூலம் பிரமுகர் ஆக பார்க்கிறார்கள். இவற்றிற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

 

சுவிஸ் வாழ் மக்கள்

போராட்டக் காலத்தில், அரசியல் கொள்கையில் இணங்கும் அமைப்புக்கள் மூலமே ஐ.நா.வேலைகளை முன்னெடுக்க வேண்டுமென்பது எழுதாத சட்டமாக திகழ்ந்தது. ஆனால் இன்று பணம் கொடுத்து வாங்கப்பட்ட ஆபிரிக்க அமைப்புக்கள் மூலமே, பலருக்கு அடையாள அட்டையும், சிலருக்கு பேச்சுரிமையும் கிடைத்துள்ளது.

இப்படியான மசவாசான வேலைகளை, ஐ.நா.வினால் ஆராயப்பட்டு, சரியான முறையில் நிருபிக்கப்படும் கட்டத்தில், அடையாள அட்டை பெற்றவர்களும், உரையாற்றியவர்களும் எதிர்காலத்தில் ஐ.நா. கட்டிடத்திற்குள் நுழைய முடியாத கட்டம் உருவாகும் என்பதை இவர்கள் அறியவில்லை.

இதுபோன்று நன்கு திட்டமிட்டப்பட்டு நகர்த்தப்படும் நாசகார செயற்பாடுகள், நீண்டகாலமாக விடுதலை போராட்டத்திற்கு உறுதுணையாக நின்று வரும் சுவிஸ் வாழ் மக்களின் அர்பணிப்பை நிட்சயம் மாசுபடுத்தும். மின்னுவதெல்லாம் பொன் அல்லா என்பதைசுவிஸ் வாழ் நிர்வாகிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

மிகச் சுருக்கமாக கூறுவதனால், இவ் கபடமான ஓட்டம், ஐ.நா.வேலை திட்டங்களுக்கு ஏற்றவை அல்லா. இது ஓர் ஒட்டப் பந்தயமே தவிர, ஐ.நா.வில் ஆக்கபூர்வமான வேலை அல்லா.

ஊதாரணத்திற்கு, ஊடகவியலாளரும், விடுதலை போராளியுமான இசைபிரியாவின் வேறுபட்ட படங்கள், செய்திகள் ஏராளமாக ஊடகத்தில் வெளிவந்த பொழுது, அவரது குடும்பத்தினர், இவற்றை தவிர்த்து கொள்ளுமாறு ஓர் அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து, யாவும் அமைதியாகியிருந்தது. பி.பி.சி. சானல் நான்கின் முக்கிய பிரமுகரான திரு. கலம் மாக்கிறே, மிகவும் பண்பான முறையில் இசைபிரியவின் சம்பவங்களை தனது ஆவணப் படத்தில் உள்ளடக்கி பல முக்கியஸ்தர்களுக்கு ஐ.நா.வில் ஏற்கனவே காண்பித்திருந்தார்.

ஆனால் தற்பொழுது திடீரென இசைபிரியாவின் கதையை, லாப நோக்கில் தமிழ்நாட்டில் படமாக்கப்பட்டு, இதை ஐ.நா.வில் வெளியிடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பொழுது, இதை அறிந்த இசைபிரியாவின் குடும்பத்தினர், அப்படத்தை வெளியிட வேண்டமென வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் இவற்றை அலட்சியம் செய்த காரணத்தினால், ஐ.நா.வில் உள்ளோர் யாரும் இப்படத்தை பார்பதற்கு முன்வரவில்லை. அதன் காரணமாக வெளியிலிருந்து மக்களை கூட்டி வந்து, ஐ.நா.வில் இசைபிரியாவின் படம் காண்பிக்கப்பட்டது. இவை ஐ.நா.வின் வேலை திட்டமா? இதனால், பதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கோ, இசைபிரியாவின் குடும்பத்தினருக்கோ என்ன பலன்?

அடுத்து, ஐ.நா.வில் அரசுகள் நடத்தும் கூட்டங்களிற்கு மட்டுமே ஐ.நா.வின் பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பு கொடுப்பது வழமை. ஆனால் வழமைக்கு மாறாக, ஐ.நா. சரித்திரத்தில் முதல் முறையாக, ஓர் அரச சார்பற்ற நிறுவனம் நடத்திய கூட்டத்திற்கு, அதுவும் தமிழர் நடத்திய கூட்டத்திற்கு, ஐ.நா. பாதுகாப்பு பிரிவினர் பலத்த பாதுகாப்பு கொடுத்துள்ளமை நகைப்பிற்குரியது. இவையாவும் நடைமுறை தெரியாதோரினால் மிகை படுத்தப்படுத்தப்பட்ட செயற்பாடுகளே. கூட்டத்தில் பிரச்சனை வரலாமென எதிர்பார்க்குமளவிற்கு, இவர்களது செயற் திட்டம் அங்கு இருந்துள்ளது.

 

ஜெனிவா வாழ் தமிழர்

ஜெனிவாவில் ஐ.நா.வேலை திட்டங்களை குழப்பும் இவர்களது நாசகார வேலைகள், இவற்றுடன் நிற்கவில்லை. ஐ.நா.விற்கு வந்து செல்லும் தமிழர்கள் மீது சரித்திரத்திலேயே முதல் முறையாக இம்முறை ஜெனிவாவில் வன்முறை கட்டவிழ்கப்பட்டுள்ளது. இவ் வன்முறைகளை, தான் வாழும் நாட்டில் செல்லா காசாக திகழ்பவர், ஜெனிவாவில் காட்சி என்ற பெயரில் மேற்கொள்ளுகிறார்.  இவற்றை சுவிஸ் நிர்வாகம் எப்படியாக அனுமதிக்க முடியும்?

இவை, ஐ.நா.வேலை திட்டங்களை குழப்புவதற்காக நன்றாக திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்டவை. எது என்னவானலும், இவ் வன்முறைகளுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் ஜெனிவா வாழ் தமிழர்களே. ஜெனிவா வாழ் தமிழர்கள் தமக்குரிய நீண்ட கால கௌரவத்தை, இப்படியான இழிவான வன்முறை சம்பவங்களை அனுமதிப்பதன் மூலம் இழக்காது பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

இவற்றை இங்கு நான் பீதியில் எழுதவில்லை, மற்றவர்களுடைய தகவலுக்காக எழுதியுள்ளேன்.

வன்முறையை துண்டுபவர்கள் யாராக இருந்தாலும், தம்மிடம் நியாயம் இல்லை என்பதை ஒத்துக் கொள்பவர்களே. இவர்களிடம் நியாயமிருந்தால் எதற்காக தமது நியாயங்கள் கருத்துக்களை பலர் முன் விவாதிக்க முடியாது? சிறிலங்காவில் கடந்த தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியின் மறுதலிப்பாகவும் இவற்றை கணிக்கலாமென சில நண்பர்கள் கூறினார்கள்.

முள்ளிவாய்காலின் போதும், அதன் முன்னரும், உயிர்களை கொடுத்து போராடிய போராளிகளும், செய்தியாளர்களும் துரோகிகளாக்கியவர்கள், அவர்களால் எடுக்கப்பட்ட படங்களையும் செய்திகளையும் எவ்வாறு தமது சுயநலம் கருதி பயன்படுத்த முடியும்? இதை தான் சொல்வது பேய்காட்டபடுபவர் இருக்கும் வரை பேய்காட்டுகிறவனும் இருப்பான்என்று.

இப்படியான நாசகார வேலைகள் தொடருமானால், ஈழத் தமிழர்களின் ஐ.நா.மனித உரிமை வேலைத்திட்டங்கள் கூடிய விரைவில் முடிவிற்கு வரும். மோசடி நிறைந்த  நபர்கள் ஐ.நா.வில் இவற்றை சாதிப்பதற்காகவே நுழைந்தார்கள் என்பது இப்பொழுது தெளிவாகிறது.

ஐ.நா.மனித உரிமை சபையுடனான வேலை என்பது அடையாள அட்டை பெற்று, உரையாற்றுவதுடன் நின்றுவிடாது. இதை சரியான முறையில் முன்னெடுப்பதற்கு பக்குவமானவரும், ஐ.நா.மொழியில் ஆற்றல் உள்ளவர்களும், துறைசார் நிபுணர்களும் அங்கு சமூகமளிக்க வேண்டும். தேர்தல் மேடைகளில்  உணர்ச்சி பொங்க பேசுவது போல் ஐ.நா.வில் பேசுவதும், றோல்ஸ், வடை, கேக்குகள் கொடுப்பதற்கும் ஐ.நா.வில் நடைபெறுவது தமிழ் விழா அல்லா! இவை ஆக்க பூர்வமானது அல்லா.

 

குழப்புவதற்கு முனைந்தவர் பலர்!

எமது நீண்ட கால வேலைத்திட்டங்களை குழப்புவதற்கு முனைந்தவர் பலர். முன்பு முனைந்தவரில் சிலர் இன்று சிறந்த மொத்த வியபாரிகளாக ஐரோப்பாவில் திகழ்கிறார்கள். ஆயுதப் போராட்டம் முடிவுற்றதை தொடர்ந்து, வேறு இருவர், கனடா, பிரித்தானியா ஆகிய நாடுகளிலிருந்து வந்து முயாற்சித்தார்கள். தற்பொழுது பிரமுகர் ஆக விரும்பியவர் முனைகிறார்கள். தற்போதை முயற்சிகள் யாவும், என்று இவர்களுக்கு கிடைக்கும் மோசடி நிதி  முடக்கப்படுகிறதோ, அன்றுடன் நின்றுவிடும்.

இன்று நாட்டில் வறுமை கோட்டின் கீழ் ஆயிரக்கணக்கான எமது உடன் பிறப்புக்கள் வாழும் நிலையில், தமிழ் நாட்டிலிருந்து திரைபட தயாரிப்பாளரும், மக்டொனால் கே.ஏப்.சி.யை உடைத்து கலாட்ட பண்ணுபவரும், ஜெனிவாவில் முகத்தை காட்டுவதற்கு, விமானச் சீட்டு, இருப்பிடம், உணவு போன்றவற்றுடன்  –  பரிசுப் பொருளாக சேலை, நகை, கைகடிகாரம், உடுப்பு, திண்பண்டம் கொடுப்பதற்கு, இவர்களால் ஐ.நா.வில் என்ன பிரயோசனம்? இவர்களை அழைத்தவர்கள் இம்முறை என்ன பிரயோசனத்தை கண்டார்கள்?News-GIF-maveetar2015

 ஐ.நா.வில் தமிழர் இரு பிரிவாக உள்ளனர் என்பதை விளம்பர செய்வதன் மூலம், சிறிலங்கா அரசிற்கு எதிராக இவர்களால் என்ன வேலை திட்டத்தை முன் வைக்கமுடிந்தது? சிலர் ஆற்றிய உரைகள், ஐ.நா.மனித உரிமை ஆணையாளருக்கும், சர்வதேசத்திற்கும், குறிப்பாக அமெரிக்காவிற்கு எதிரானவையே தவிர, சிறிலங்காவிற்கு எதிரானவை அல்லா! இங்கு தான் இவர்களது கபட தன்மைகள் வெளியாகின்றன.

அரசியல் மனித உரிமைகள் பற்றி எந்தவித தெளிவான அறிவு அற்றவர்கள் – மற்றவர்கள் பேசுவது, உரையாடுவது, எழுதுவது, செவ்வி கொடுப்பது யாவும் தவறான விடயங்களென கூறுவதற்கு என்ன அருகதையுண்டு? இவற்றை இவர்களிடம் சன்மானம் பெறுபவர்களிடமும், விமானச் சீட்டு பெற்றவர்களிடம் மட்டுமே, அவர்களளால் கேட்க கதைக்க உரிமை உண்டு.

நாம் மிக நீண்டகாலமாக பெரியோர்களினால் கொடுக்கப்பட்ட வேலை திட்டங்களை அவர்கள் கொடுத்ததிற்கு இணங்கவே செய்தோம், செய்கிறோம், செய்வோம். முன்பு பெரியோர்களிடமிருந்து பல பாராட்டுகளை பெற்ற எங்களிற்கு, நேற்று உதயமானவர்களின் கருத்துக்கள் முக்கியமானவை அல்லா.

நாம் யாருக்கு வக்காளத்து வாங்குகிறோம் என்பதை கதைப்பதற்கு முன், இவர்கள் சரியானவர்களுக்கு வக்காளத்து வாங்குகிறர்களா என்பதை முதலில் பார்க்க வேண்டும். நாம் மிரட்டல்களுக்கு வன்முறைகளுக்கும்  பயந்தவர்கள் அல்லா. இறப்பை யாவரும் ஒரு நாள் சந்தித்தே ஆக வேண்டும்.

 

திரு விக்னேஸ்வரன்

 சுருக்கமாக கூறுவதனால், சிலர் எதிர்பார்ப்பது என்னவெனில், நாம் வேறு குழுக்களுடனோ அல்லது சிறிலங்கா அரசுனுடனோ ஒத்துமொத்தமாக இணைந்து, ஐ.நா. வேலை திட்டங்களை முற்று முழுதாக கைவிட  வேண்டு  என்பதையா? காரணம் இவர்களுடன் நிற்பவர் 2009 மே மாதத்தின் பின்னர், ஐ.நா.வில் தமிழர்களின் வேலை திட்டங்களை முடக்குவதற்காகவே களம் இறக்கப்பட்டவர்.

இப்படியானவர்களது ஆலோசனைக்கு அமையவே, முன்பு ஓரு தடைவ ஐ.நா.வின் லீவு நாளான சனிக்கிழமை , பல நாடுகளிலிருந்து புகையிரதத்திலும், வண்டிகளிலும் ஜெனிவா சென்று மேடை போட்டு பேசினர்கள். இவற்றை பார்த்து சிங்கள அரசு கை கொட்டி சிரித்தது.

 கடந்த வருடம் மார்ச் மாதம் ஐ.நா.மனித உரிமை சபையில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தை எதிர்த்தவர்கள், தற்பொழுது ஐ.நா. மனித உரிமை ஆணையாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கையை வரவேற்கின்றனர். ஆனால் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை எதிர்கின்றனராம்!

 இதே நபர்கள் தான், முன்பு திரு விக்னேஸ்வரன் வடமாகணசபையின் முதலாமைச்சர் பதவிக்கு போட்டி போட்ட வேளையில்அரசியல் தெரியாதவர், கொழும்பில் வசிப்பவர், பிள்ளைகள் சிங்களவர்களை திருமணம் செய்தவர்கள் போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்தவர்கள். இவர்கள் தான் இன்று, திரு விக்னேஸ்வரன் தான் தலைமை தங்குவதற்கு தகுதியுடையவர் என்று புகழ்பவர்களும். சுருக்கமாக கூறுவதனால், இவர்களிற்கு எந்த விடயத்திலும் ஒரு நீண்ட பார்வை கிடையாது என்பதே உண்மை. 

 

இப்படியான மனோபக்குவம் உள்ளவர்கள், ஆறு வருடங்களாகியும் மக்களுக்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்? விதண்டவாதம் பேசுவதையும், தினமும் பிழை பிடிப்பதையும் நிறுத்திவிட்டு, ஐ.நா.மனித உரிமை சபையின் 47 அங்கத்துவ நாடுகளும் ஏற்ககூடிய வகையில் எந்த வியடத்தை இவர்களால் முன் வைக்க முடியும்? தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானத்தை ஏற்கிறபடியால் அதை எதிர்க்க வேண்டுமென்பது அரசியல் முதிர்ச்சியின்மையே.

 மிகவும் வேடிக்கையான விடயம் என்னவெனில், பிரகடனத்தில் உள்ள ஒரு பந்தியை கூட ஒழுங்காக வாசித்து விளங்க முடியாதவர்களும், பிரகடனத்தை எதிர்கிறார்களாம்!

 காரணம், இவ் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டால், வர்தகர்களிடம் தொடர்ந்து நிதி வாசுலிப்பதும், ஜெனிவா யாத்திரை செல்வதும், மோசடிப் பணங்களை செலவிடுவது  போன்றவை, பாதிக்கப்படுமென்ற பீதியே இவர்களிடம் காணப்படுகிறது.

 “கொள்கை உள்ளவனுக்கு ஒரு வாழ்க்கை> கொள்கை இல்லாதவனுக்கு பல வாழ்க்கை உண்டு

 

ச. வி. கிருபாகரன்

பிரான்ஸ்

Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*