யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பேராசிரியர் சண்முகதாசின் பவளவிழா.

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேராசிரியர் அ.சண்முகதாசின் பவளவிழா மற்றும் சண்முகதாஸ்new-Gif1 மனோன்மணி இணையரின் பொன்விழா நிகழ்வு 14.10.2015 பிற்பகல் 4.30 மணிக்கு நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது பேராசிரியருக்கான அகவைப் பரிசிலாக ஜப்பானியக் காதல் பாடல்கள் என்ற நூல் முனைவர் மனோன்மணி சண்முகதாசால் துணைவரிடம் வழங்கப்பட்டது. விழாத் தம்பதியர் இருவரும் நூலின் முதற்பிரதியை இந்திய உதவித்தூதர் ஆ.நடராஜனிடமும் ஸ்ரீமதி சாந்தினி நடராஜனிடமும் கையளித்தனர்.
 உலக நிலையில் கனடா, சுவிஸ், ஜேர்மன், இலங்கை என தனது அகவை நிறைவைக் கண்ட ஒரே தமிழ்ப்பேராசிரியர் அ.சண்முகதாஸ் ஆவார் என வாழ்;த்துரை வழங்கியோர் சிலாகித்துப் பேசினர். 05 10 A 10 AA 10 C 10 D 15 16 18 21 27 29 31 33 40 SangaGif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*