நாட்டில் சுகாதாரம் கல்வி உள்ளிட்ட விடயங்களில் மாகாண சபையும் மத்திய அரசும் பிரிந்து செயற்பட முடியாது.

நாட்டில் சுகாதாரம் கல்வி உள்ளிட்ட விடயங்களில் மாகாண சபையும் மத்திய அரசும் பிரிந்து செயற்பட முடியாது. எனவே new-Gif1அரசின் கொள்கையின் அடிப்படையில் சகல தரப்பினரும் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நீர்கொழும்பு பொதுவைத்தியசாலையில் புதிய கட்டடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலவசக் கல்வி, இலவச சுகாதாரம் என்பனவற்றுக்கு அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்படவுள்ளது. இவற்றுக்கு அரசும் அதிகளவு நிதியை ஒதுக்கியுள்ளது போன்று நாட்டு மக்களுக்குச் சிறந்த சுகாதார வசதியும் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியும் வழங்க வேண்டியது அரசின் நோக்கம் என்றார்.

மற்றொரு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி,

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அடுத்த மூன்று வருடங்களில் நடை முறைப்படுத்தப்பட உள்ள தேசிய மர நடுகை திட்டத்தின் ஊடாக தற்போது நாட்டில் 29 வீதமாக இருக்கும் வன அடர்த்தியை 32 வீதமாக அதிகரிக்கப்படும் என்றும் இதற்கு அரசியல்வாதிகள் உட்பட எல்லோரினதும் ஒத்துழைப்பு அவசியமானதாகும்.

மரம் ஒன்றை வெட்டுவது ஒரு மனித உயிரை கொல்வதற்கு சமனானது என்றபோதும், இந்த நாட்டில் உள்ள பல்வேறு வியாபாரிகள் பணம் குறித்து மட்டுமே சிந்தித்து நாடு மற்றும் நாட்டின் எதிர்காலம் குறித்து எவ்வித கரிசனையும் இன்றிச் சுற்றாடலை அழித்து தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்களுக்குச் சவாலாக அமையும் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் கடுமையான சட்டங்கள் பிரயோகிக்கப்படும்.News-GIF-maveetar2015

இயற்கையைப் பாதுகாப்பது ஒவ்வொருவரினதும் கடமையும் பொறுப்புமாகும்.கடந்த சில வருட காலப்பகுதியில் இலங்கையில் வனவளங்கள் மிகவேகமாக அழிவுக்குட்படுத்தப்பட்டுள்ளது. வனவளங்களின் குறிப்பிட்ட அளவாவது பாதுகாக்கப்பட்டிருப்பது போர் நடைபெற்ற வடக்கு கிழக்குப் பகுதிகளிலேயாகும்.

அபிவிருத்தியும் தொழில்நுட்பம் உலகுக்கு பல்வேறு விடயங்களைக் கொண்டு வந்துள்ளபோதும் மறுபக்கத்தில் இயற்கையை அழிவுக்குட்படுத்துவதற்கு அவை வழிவகுத்துள்ளது. இயற்கை வளங்களை பாதுகாப்பது மனிதர்கள் உட்பட ஏனைய ஜீவராசிகளின் இருப்புக்கு மிக அவசியமான விடயமாகும் என்பதோடு, சூழலை அழிப்பது என்பது உலகில் உள்ள உயிரினங்களை அழிப்பதற்கு சமன் என்றார்.Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*