இணைய வசதி இல்லாத ஆப்ரிக்க மக்களுக்கு பேஸ்புக் நிறுவனம் அதிரடி திட்டம்!

இணைய வசதி இல்லாத ஆப்ரிக்க மக்களுக்கு பேஸ்புக் நிறுவனம் அதிரடி திட்டம் ஒன்றைnew-Gif1 அறிவித்துள்ளது.

உலகின் சரிபாதி மக்கள் இணையங்களோடு தொடர்பில்லாமல் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, பேஸ்புக் நிறுவனத்தின் ‘இண்டர்நெட் டாட் ஆர்க்’ திட்டத்தின் ஒருபகுதியாக இணைய வசதி இல்லாத பகுதிகள், இணையத்தின் வேகம் மிக குறைவாக உள்ள பகுதிகளில் ‘அமோஸ்-6’ செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.News-GIF-maveetar2015

இதன் முதல்கட்டமாக வரும் 2016-ம் ஆண்டு சஹாரா துணைக்கண்டத்துக்கு உட்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் அதிவேக இணையவசதியை வழங்கும் நோக்கில் செயற்கைகோள் ‘அமோஸ்-6’ செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த இணையச்சேவையின் மூலம் வேலைவாய்ப்பு, வேளாண்மை தொடர்பான தகவல்கள் சார்ந்த தளங்கள், மருத்துவம், கல்வி மற்றும் பேஸ்புக் ஆகிய இணையச் சேவைகள் இங்குள்ள மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*