தென்மராட்சியில் மாணவியின் மார்புக் கச்சைக்குள் கைத்தொலைபேசி

தென்மராட்சியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் வகுப்புக்கு new-Gif1கைத் தொலைபேசி கொண்டுவந்த மாணவியை ஆசிரியை தண்டித்ததால் மாணவியின் தாயார் ஆசிரியையின் வீடு தேடிச் சென்று சண்டையிட்டதாகத் தெரியவருகின்றது.தரம் 11ல் கல்வி கற்கும் மாணவி அடிக்கடி கைத்தொலைபேசியை வகுப்புக்குள் கொண்டு வந்து ஏனைய மாணவிகளுடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுப்பதுடன் பாடசாலைக்கு வெளியே உள்ள நபர்களுடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதைத்து வந்துள்ளார்.இதனை அவதானித்த வகுப்பு ஆசிரியை குறித்த மாணவியின் கைத்தொலைபேசியைப் பறித்து வைத்து அதனை ஆராய்ந்த பின்னர் அதிபரிடம் கொடுத்துள்ளார். அதிபரும் மாணவியின் தாயை அழைத்து இது தொடர்பாக எச்சரிக்கை செய்தபின்னர் கைத்தொலைபேசியை கொடுத்துள்ளார்.

இச் சம்பவம் நடந்து சில மாதங்களின் பின்னர் மீண்டும் அந்த மாணவி வகுப்புக்குள் கைத்தொலைபேசியை வைத்திருப்பதாக ஆசிரியைக்கு சில மாணவர்கள் தெரிவித்திருந்திருந்தனர்.இதனையடுத்து ஆசிரியை மாணவியின் பாடசாலை உபகரணப் பையினை ஆராய்ந்த போது அங்கு கைத்தொலைபேசி காணப்படவில்லை. இதனையடுத்து தொலைபேசி இல்லை என ஆசிரியை மாணவியை விடுவித்துள்ளார்.ஆசிரியை வகுப்பை விட்டு வெளியேறிச் சென்ற போது ஆசிரியையிடம் சில மாணவர்கள் தெரிவித்த தகவலையடுத்து ஆசிரியை குறித்த மாணவியை பாடசாலையில் உள்ள தனி அறைக்குள் அழைத்துச் சோதனையிட்ட போது அந்த மாணவியின் மார்புக் கச்சைக்குள் கைத்தொலைபேசி காணப்பட்டுள்ளது. இதனையடுத்து பாடசாலை அதிபரிடம் மீண்டும் மாணவி கொண்டு செல்லப்பட்டார்.News-GIF-maveetar2015

தகவல் மாணவியின் தாயாருக்கு தெரியப்படுத்திய போது பாடசாலைக்கு வந்த தாயார் தனது மகளை அவமானப்படுத்திவிட்டதாக கூறி அதிபருடன் சண்டையிட்டுள்ளார். அத்துடன் ஆசிரியையுடனும் சண்டையிட்டு பின்னர் அன்று மாலையே ஆசிரியையின் வீ்ட்டுக்கும் சென்று ஆசிரியையைத் தாக்க முற்பட்டதாகவும் தெரியவருகின்றது. ஆசிரியையின் கணவர் பொலிசாருக்கு முறையிட முயன்ற போதே மாணவியின் தாயார் அவ்விடத்தை விட்டுச் சென்றுள்ளார். மாணவிக்கு தந்தை இல்லை எனவும் தாயார் அரசஅலுவலராகக் கடமை புரிவதாகவும் அத்துடன் குறித்த மாணவி ஒரே மகள் எனவும் தாயாரின் சகோதரர்கள் வெளிநாட்டில் இருப்பதால் மாணவிக்கு கடும் செல்லம் வழங்கி வருவதாகவும் பாடசாலை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதே வேளை தாயார் அச்சுறுத்திய விடயத்தை பெரிதுபடுத்தாது இருக்குமாறு அதிபர் ஆசிரியைக்கு தெரிவித்துள்ளாராம். குறித்த மாணவி மார்புக்குள் தொலைபேசி வைத்திருப்பதை அந்த வகுப்பில் இருக்கும் மாணவர்களே கண்டுள்ளார்கள் என்பதும் மாணவியின் இந்தச் செயற்பாடு எவ்வாறான நடத்தையை காட்டும் என்பதை மாணவியின் தாயார் அறியவில்லையா? என்பதும் கவலைக்குரிய ஒன்றாக இருப்பதாக பாடசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*