வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தில் சர்வதேச முதியோர் தினவிழா

வடமாகாண  சமூக சேவைகள் திணைக்களத்தின் சர்வதேசnew-Gif1 முதியோர் தினவிழா  கிளிநொச்சி கூட்டுறவு கலாசார மண்டபத்தில் இன்று  06ஆம் திகதி வடமாகாண திணைக்களப் பணிப்பாளர் திருமதி நளாயினி இன்பராஜ் தலைமையில் நடைபெற்றுள்ளது.
வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், வடமாகாண முதியோர் தின நிகழ்வுகள் கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இன்று காலை 8 மணியளவில் காக்கா கடை சந்தியில் ஆரம்பித்த நடை பயணம், கூட்டுறவு சபை மண்டபத்தினை வந்தடைந்தது. நடை பயணத்தில் வ.மா கல்வி அமைச்சர் குருகுலராஜா, சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டுறவு கலாசார மண்டபத்தைச் சென்றடைந்ததும் . காலை 9.30 மணிக்கு ஆரம்பமான  முதியோர் தினவிழாவில் முதன்மை விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற முதியவர்களுக்கு பரிசில் களை வழங்கி கொரவித்து உரையாற்றியுள்ளார். News-GIF-maveetar2015
சிறப்பு விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கலந்துகொண்டார் தொடர்து . முதியோர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் முதியோர்களுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களும் வழங்கி கொரவிக்கப்பட்டன .
வடமாகாணத்தில் முதன்முறையாக மாகாண முதியோர் தினவிழா நடத்தப்படுவது குறிப்பிடத்தக்க விடையமாகும்.
வடமாகாண முதியோர் தின நிகழ்வில் முதியவர்கள் பல்வேறு நிகழ்வுகளில் தங்கள் திறமைகளை வெளிக்காட்டுகின்றனர் தொடர்ந்து கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது.Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*