சுன்னாகத்தில் இளைஞர்கள் அட்டகாசம்

யாழ். சுன்னாகத்தில் இளைஞர்களின் அட்டகாசம் தொடர்ந்துnew-Gif1கொண்டே இருக்கின்றதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

சுன்னாகம் கந்தரோடை மடம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மோட்டார் சைக்கிள்களில் வாள்கள் பொல்லுகள் தடிகள் சகிதம் வந்த இளைஞர் கும்பல் ஒன்று அந்தப் பகுதியில் உள்ள பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டின் வேலிகளை வெட்டி வீழ்த்தியதுடன், அந்த வீட்டில் இருந்த கல்வி கற்கும் மாணவனையும் தாக்கி அட்டகாசம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்கள்.

குறிப்பிட்ட வீட்டுக்காரர்களுக்கும் அயல் வீட்டுக்காரர்களுக்கும் இடையே நிலவிய பகைமை காரணமாக இந் நடவடிக்கையை அயலவர் தனது சிநேகிதர்கள் மூலம் மேற்க்கொண்டதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.News-GIF-maveetar2015

சுன்னாகம் பொலிசாருக்கு இரவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிசார் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்ட போதிலும் இது வரையில் குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் யாரும் பொலிசாரினால் கைது செய்யப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை பொலிசார் குறிப்பிட்ட இரு பகுதியினரையும் சமாதானமான முறையில் செல்லும் படி கூறியதாகவும் அந்தப் பகுதியில் உள்ள பொது மக்கள் தெரிவித்துள்ளார்கள்.Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*