நன்றியில்லாதவரா கமல்?

இதற்கு மேலும் பேசாமலிருந்தால் எல்லா குற்றச்சாட்டும் உண்மையாகிவிடும் என்று new-Gif1நினைத்திருக்கலாம்… நடிகர் சங்கத்தில் சுமார் 60 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக நடிகர் எஸ்.வி.சேகர் கூறியதற்கும், அதை வழிமொழிந்த விஷாலுக்கும் எதிராக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்போவதாக அறிவித்திருக்கிறார் சரத்குமார்.

தேர்தல் நெருங்க நெருங்க சரத்குமார், ராதரவி இருவரும் மின்னலை போல சுற்றி வாக்குகளை கேட்டு வருகிறார்கள். கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக நாடக நடிகர்களிடம் அவர்கள் பேசி வருகிறார்கள். இவர்களுடன் நடிகர் ராம்கி போன்றவர்களும் செல்கிறார்கள். ஆனால் தேர்தலில் உதவி தலைவருக்கு போட்டியிடவிருக்கிற சிம்பு மட்டும் இந்த வாக்கு கேட்பு படத்தில் எங்கும் காணோம். (ஒருவேளை அதையும் ஷுட்டிங் என்று நினைத்துவிட்டாரோ?)News-GIF-maveetar2015

ஒரு வேட்பாளர் நான் என்ன செய்தேன், என்ன செய்யப் போகிறேன் என்று வெளிப்படையாக கூறி வாக்கு கேட்பதை போல, இந்த தேர்தல் நேரத்திலும் நிறைய பேசி வருகிறார் சரத். அதில் விஸ்வரூபம், உத்தமவில்லன் பஞ்சாயத்துகளை எப்படி தீர்க்க உதவினேன் என்பதும் அடக்கம். அவ்வளவு செய்தும் ‘கமல், எதிரணிக்கு ஆதரவாக இருக்கிறாரே?’ என்கிற ஆதங்கம் அதில் நிரம்பி வழிகிறது.

சரத் சொல்வதை பார்த்தால் நன்றியில்லாதவரா கமல்? என்று கேள்விதான் மனதில் எழுகிறது.Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*