“இப்படி பிழைப்பதை விட ரோட்டில் துண்டுபோட்டு பிழைக்கலாம்”

வெல்லாவெளி பிரதேச சபையின் புதிய கட்டிடம் நாளை திறக்கப்படவுள்ள நிலையில்new-Gif1 அதையொட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் வருகைக்கு எதிராக வெல்லாவெளி பிரதேசத்தில் துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

குறித்த பிரதேச சபை வெல்லாவெளிக்கு இடம் மாற்றுப்படும் போது   அது அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இப்போது அதன் திறப்பு விழாவுக்கு செல்வதையிட்டே இவ்வெதிர்ப்பு  துண்டுப்பிரசும் வெளியிடப்பட்டுள்ளது.

“இப்படி பிழைப்பதை விட ரோட்டில் துண்டுபோட்டு பிழைக்கலாம்” என்ற தலைப்பில் இந்த துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.இப்படி பிழைப்பதை விட ரோட்டில் துண்டுபோட்டு பிழைக்கலாம் - கூட்டமைப்பு எதிராக துண்டுபிரசும்News-GIF-maveetar2015

ஆரம்ப காலத்தில் பழுகாமம் கிராமத்தில் இருந்த இச்செயலகமானது படுவாங்கரை வாழ்  மக்களின் நன்மை கருதி தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் ஆட்சிக்காலத்தில் முன்னாள் தவிசாளர் சிறிதரன் அவர்களின் கடுமையான முயற்சியின் காரணமாக வெல்லாவெளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.அவ்வேளை அதனை புரிந்து கொள்ள மறுத்து அதனை வைத்து அரசியல் செய்த கூட்டமைப்பினர் இப்போது அதனை திறந்துவைக்க வருவது கீழ்த்தரமானது என வெல்லாவெளி ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.இதன் காரணமாகவே இப்பிரசுரம் எமது மக்களால் வெளியிடப்பட்டுள்ளது.என்றார் அவர்.Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*